வனிதா குறித்து விசித்திராவின் பளீச் பதில்!
பிக்பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்டு பிரபலமடைந்த பலரில் நடிகை விசித்திராவும் ஒருவர். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு தொடர்ச்சியாக பேட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
அந்த வகையில் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில் பிக்பாஸ் வீட்டில் விசித்திரா இருந்த போது ரிவியூ செய்த வனிதா அவரை மிகவும் திட்டியதை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விசித்திரா, ‘வனிதா இந்த முறை ஒரு விமர்சகராக பிக்பாஸ் நிகழ்ச்சியை அணுகவில்லை. ஒரு அம்மாவாக தான் அணுகினார். தனது மகள் ஜோவிகா ஜெயிக்க வேண்டும் என நினைத்தார். ஆனால், எது நடக்கவில்லை. எனவே தான் போட்டியாளர்கள் அனைவரையும் திட்டிக்கொண்டிருந்தார். ரிவியூ செய்யவில்லை’ என்று கூறியுள்ளார்.