படுக்கைக்கு அழைத்த சீனியர் காமெடி நடிகர்.. கேரவனுக்கு வரவைத்து நடிகை என்ன பண்ணிருக்கார் பாருங்க?
சென்னை: பாக்யராஜ் இயக்கிய வீட்ல விசேஷங்க படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரகதி. பிறகு பெரிய மருது, பாண்டியனின் ராஜ்ஜியத்திலே, ஜெயம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து அரண்மனைக்கிளி, வம்சம் உள்ளிட்ட நெடுந்தொடர்களிலும் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் தன்னை ஒரு சீனியர் காமெடி நடிகர் படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.
சினிமா என்றாலே ஆணாதிக்கம் நிறைந்தது என்ற கூற்று பல காலமாக உண்டு. அதனை உறுதிப்படுத்தும்படிதான் சினிமாவில் பணிபுரியும் பெரும்பாலானவர்கள் ஆண்களாக இருக்கிறார். பெண் இயக்குநர், பெண் ஒளிப்பதிவாளர் எல்லாம் ரொம்பவே கம்மிதான். நடிப்பில் பெண்கள் அதிக அளவு இருந்தாலும் அவர்களுக்கு உருவாக்கப்படும் பிரச்னை மற்ற பெண்களை திரைத்துறைக்குள் வருவதற்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. அப்படி உள்ள பிரச்னைகளில் தலையாய பிரச்னைதான் அட்ஜெஸ்ட்மெண்ட்.