2024ம் ஆண்டில் கிரகணங்கள் ஏற்படும் தேதிகளும் சூதக் காலமும்..!
சூரியன் – சந்திரன் – பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வின் போது சூரியனின் ஒளியை சந்திரன் தற்காலிகமாகத் தடுக்கிறது. நெருப்பு வளைய சூரிய கிரகணத்தின் போது சந்திரன் சூரிய ஒளிவட்டத்தின் பெரும்பகுதியை மறைத்து, சந்திரனின் விளிம்புகளைச் சுற்றி சூரிய ஒளி போன்ற ஒரு வளையம் மட்டுமே தெரியும். அந்த நேரத்தில் பூமியின் சில இடங்களில் நிழல் ஏற்படும். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வந்து, சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
இந்நிலையில், நடப்பு ஆண்டில் நான்கு கிரகணங்கள் ஏற்படும், இதில் 2 சூரிய கிரகணமும் 2 சந்திர கிரகணமும் ஏற்படும். ஆனால் அந்த கிரகணங்கள் இந்தியாவில் தென்ப்படாது. அதனால் சூதக் காலமும் இந்தியாவில் கிடையாது.
முதல் சூரிய கிரகணம் 2024 எப்போது?
2024ஆம் ஆண்டு முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 8ஆம் தேதி
நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணம் இரவு 9:12 மணிக்கு தொடங்கி
அதிகாலை 1:25 மணிக்கு முடிவடையும். இந்த கிரகணத்தின் மொத்த
கால அளவு 4 மணி 39 நிமிடங்கள் இருக்கும். சூரிய கிரகணத்தின்
சூதக் காலம் 12 மணி நேரத்திற்கு முன் தொடங்குகிறது. இருப்பினும்,
இந்த கிரகணம் தென்மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஆசியா,
ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா,
பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், வட துருவம், தென்
துருவம் ஆகிய பகுதிகளில் தெரியும். இது இந்தியாவில் காணப்படாது. என்பதால், அதன் சூதக் காலமும் இந்தியாவில் செல்லுபடியாகாது
இரண்டாவது சூரிய கிரகணம் 2024 எப்போது?
2024 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் 2-3 நள்ளிரவில் நிகழும். இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் 2 ஆம் தேதி இரவு 9:13 மணி முதல் இந்திய நேரப்படி மாலை 3:17 மணி வரை நீடிக்கும். கிரகணத்தின் மொத்த கால அளவு 6 மணி 4 நிமிடங்கள் இருக்கும். இருப்பினும், அதன் சுடக் காலம் இந்தியாவில் செல்லுபடியாகாது, ஏனெனில் இது இந்தியாவில் காணப்படாது. இந்த சூரிய கிரகணம் அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் தென் துருவத்தில் காணப்படும்.
முதல் சந்திர கிரகணம் 2024 எப்போது?
2024 ஆம் ஆண்டில், முதல் சந்திர கிரகணம் மார்ச் 25 அன்று நிகழும், இது பெனும்பிரல் சந்திர கிரகணமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் சந்திரன் பூமியின் நிழலின் வெளிப்புற விளிம்புகள் வழியாக மட்டுமே செல்கிறது. இந்த கிரகணம் ஐரோப்பா, வடகிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியாவின் பெரும் பகுதிகள், ஆப்பிரிக்காவின் சில பகுதிகள், வடக்கு மற்றும் தென் அமெரிக்காவில் தெரியும். இது தவிர, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக், ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளிலும் இது தெரியும். இந்திய நேரப்படி காலை 10:23 மணி முதல் மாலை 3:02 மணி வரை நீடிக்கும். இது இந்தியாவில் காணப்படாது, எனவே அதன் சூதக் காலமும் செல்லாது.
இரண்டாவது சந்திர கிரகணம் 2024 எப்போது?
2024 ஆம் ஆண்டில், இரண்டாவது சந்திர கிரகணம் செப்டம்பர் 18 ஆம் தேதி நிகழும் பகுதி சந்திர கிரகணமாக இருக்கும். இதையும் இந்தியாவில் பார்க்க முடியாது. இது ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகாவிலும் தெரியும். இந்த கிரகணத்தின் போது சந்திரனின் சிறிய பகுதி மட்டுமே ஆழமான நிழலில் நுழையும். இந்திய நேரப்படி காலை 6:12 மணிக்குத் தொடங்கி, 10:17 மணி வரை தொடரும். அதன் சுதக் காலம் இந்தியாவில் செல்லுபடியாகாது.