Bhavatharini: பவதாரிணிக்கு எங்கள் வெற்றியை அர்ப்பணிப்போம்: புயலில் ஒரு தோணி படத்தின் இயக்குநர் ஈசன் உறுதி!

றைந்த பாடகர் பவதாரிணி கடைசியாக இசையமைத்த ‘புயலில் ஒரு தோணி’ படத்தின் இயக்குநர் ஈசன் தனது வருத்தங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

பவதாரிணி

பாடகர் பவதாரிணி கடந்த ஜனவரி 25ஆம் தேதி காலமான செய்தி தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை மிகப்பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி, சிகிச்சைக்காக இலங்கை சென்றிருந்தபோது சிகிச்சைக்கு முன்பாகவே மாரடைப்பால் உயிரிழந்தார். இலங்கையில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு தமிழ் திரையுலகினர் தங்களது அஞ்சலியை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து அவரது உடல் தேனி மாவட்டம், பண்ணைப்புரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஒரு பாடகராக தனது குழந்தை போன்ற குரலால் அனைவரையும் வசீகரித்தவர் பவதாரிணி. பவதாரிணி பல திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார் என்பது வெகுஜன பரப்பில் பரவலாக அறியப்படாத ஒரு தகவல். இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். தமிழில் அமிர்தம், இலக்கணம் உள்ளிட்ட பவதாரிணி இசையமைத்தப் படங்கள் வெளியாகி இருக்கின்றன.

மேலும் போரிடப் பழகு, கள்வர்கள், மாயநதி உள்ளிட்ட அவர் இசையமைத்த பாடல்கள் வெளியாகவில்லை. பவதாரிணி இறப்பதற்கு முன் கடைசியாக இசையமைத்த படம் புயலில் ஒரு தோணி. இந்தப் படத்தின் இயக்குநர் ஈசன் பவதாரிணியின் மறைவு குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.

பவதாரிணி இசையமைத்த கடைசி திரைப்படம்

புதுமுகங்கள் விஷ்ணு பிரகாஷ், அர்ச்சனா சிங் ஆகியோர் புயலில் ஒரு தோணி படத்தில் நடித்துள்ளார்கள். பவதாரிணி குறித்து படத்தின் இயக்குநர் ஈசன் இப்படி கூறியுள்ளார்.

‘பெண்களுக்கு ஆதரவான ஒரு குரலாக இந்தப்படம் உருவாகியிருக்கிறது. நான் கதையைத் தேர்வு செய்யும் முன்பாகவே பவதாரிணியை தான் இசையமைப்பாளராக வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன். நான் முழு படத்தையும் முடித்த பின்பு பவதாரிணியை நேரில் சந்தித்து முழு படத்தையும் திரையிட்டு காட்டினேன்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *