90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் காதல் திரைப்படம் ‘பிரேமம்’ இன்று ரி ரிலீஸ்
‘நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி மிகப் பெரிய புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்றார்.
இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும், சென்னையில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக ஒரு வருடம் ஒரே திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அவ்வளவு பெரிய வெற்றி பெற்ற திரைப்படத்துக்கு பிறகு 8 ஆண்டுகளாக இடைவெளி எடுத்துக் கொண்ட அவர் கடந்த ஆண்டு பிருத்விராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் கோல்ட் திரைப்படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் படுதோல்வி அடைந்தது. இப்போது சாண்டியை வைத்து கிஃப்ட் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் பிரேமம் திரைப்படம் தமிழகத்தின் சில திரையரங்குகளில் இன்ற் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் ஹிட்டான படங்களின் ரி ரிலீஸ் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.