நாயகன் பாணியில் உருவாகும் தனுஷின் அடுத்த படம். டைட்டில் என்ன தெரியுமா?
இந்நிலையில் தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் நடிக்கும் தனுஷ் 51 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கதை 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு அரசியல் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படம் நாயகன் பாணியில் மும்பை தாராவியில் நடப்பது போல கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்துக்கு தாராவி என்றே பெயர் வைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.