ராயல் என்பீல்டு நல்ல இருப்பது ஹோண்டாக்கு பிடிக்கலபோல! இப்படி ஒரு வேலையை பாத்திருக்கா! இத எப்படி எடுத்துக்கறது!

ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 (Royal Enfield Himalayan 450) பைக்கிற்கு போட்டியாக ஹோண்டா ஓர் அட்வென்சர் (Honda Adventure Bike) ரக பைக்கை தயார் செய்துக் கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது உண்மையா?
இந்திய இளைஞர்கள் பலரின் ஃபேவரிட் பைக் மாடலாக ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 (Royal Enfield Himalayan 450) இருக்கின்றது. இது ஓர் அட்வென்சர் (Adventure Bike) ரக பைக் மாடல் ஆகும். நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற டூ-வீலராகவும் இது இருக்கின்றது.
இதுமட்டுமில்லைங்க, மிகவும் மோசமான மற்றும் கரடு-முரடான பாதைகளைச் சமாளிக்கும் திறன் கொண்ட மோட்டார்சைக்கிளாகவும் ஹிமாலயன் 450 காட்சியிளிக்கின்றது. இத்தகைய ஓர் பைக் மாடலுக்கே போட்டியளிக்கும் வகையில் புதிய பைக்கை பிரபல இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda Motorcylce and Scooter India) அறிமுகம் செய்ய இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிறுவனம் சமீபத்தில் ஓர் புதுமுக அட்வென்சர் பைக்கிற்காக பேடண்ட் (Patent) பதிவை செய்ததன் வாயிலாக இந்த தகவல் உறுதியாகி இருக்கின்றது. ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தயாரிப்பிற்கு போட்டியாக சிபி 350 ஆர்எஸ் (CB350 RS) மாடலை இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இது கிளாசிக் 350 (Royal Enfield Classic 350)-க்கே போட்டியாக உள்ளது. இந்த நிலையிலேயே இதே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மற்றுமொரு தயாரிப்பான ஹிமாலயனுக்கு போட்டியளிக்கும் நோக்கில் ஹோண்டா செயல்பட தொடங்கி இருக்கின்றது. இந்த வாகனமும் ஹிமாலயனைப் போல பிரீமியம் அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கு சான்றாகவே தற்போது வெளியாகி இருக்கும் பேடண்ட் பதிவின் படம் அமைந்திருக்கின்றது. ஹோண்டா உருவாக்க இருக்கும் அட்வென்சர் பைக்கின் ஸ்கெட்ச் படம் தற்போது வெளியாகி இருக்கின்றது. இந்த படத்தை வைத்து பார்க்கையில் ஹோண்டாவின் அட்வென்சர் பைக், ராயல் என்பீல்டு ஹிமாலயனின் டிசைனுடன் ஒத்துப் போகும் வகையில் இருப்பதை நம்மால் உணர முடிகின்றது.
நீர் நிலைகளை சமாளிக்கும் வசதிக் கொண்ட சைலென்சர், இரட்டை துண்டு அமைப்புடைய இருக்கை, ஸ்போக் வீல்கள், கிராப் ரெயில், விண்ட் ஸ்கிரீன் மற்றும் உயரமான மட்குவார்டு ஆகியவற்றை ஹோண்டா அதன் அட்வென்சர் பைக்கில் வழங்க இருக்கின்றது. ஹோண்டா நிறுவனம் ஸ்கிராம்ப்ளர் மற்றும் அட்வென்சர் வாகன பிரிவில் தன்னுடைய கால் தடத்தை மிக ஆழகமாக பதிக்க விரும்புவதையே, அந்த நிறுவனத்தின் தற்போது செயல் குறிக்கின்றது.
ஆகையால், வரும் நாட்களில் இன்னும் பல இதுமாதிரியான தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஹோண்டா ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனத்தின் அட்வென்சர் பைக் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கப்படும் எனில் அது ஏற்கனவே விற்பனையில் இருக்கம் அட்வென்சர் பைக் மாடல்களான ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450, கேடிஎம் 390 அட்வென்சர், பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் மற்றும் யெஸ்டி அட்வென்சர் ஆகிய மாடல்களுக்கு மிகப் பெரிய போட்டியாக அமையும்.
குறிப்பாக, ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450-க்கே மிக பெரிய போட்டியாளனாக இதன் வருகை அமைய இருக்கின்றது. ஹோண்டா சிபி 350 பைக்கில் இடம் பெற்றிருக்கும் எஞ்சினையே ஹோண்டா தன்னுடைய அட்வென்சர் பைக்கிலும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 5,500 ஆர்பிஎம்மில் 20.8 பிஎச்பி பவரையும், 3,000 ஆர்பிஎம்மில் 30 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது.