Rajini Salary – கெஸ்ட் ரோல்தான்.. ஆனால் சம்பளம் இவ்வளவா?.. லால் சலாமில் ரஜினி செய்த சம்பவம் தெரியுமா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்தார். அந்தப் படம் உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்தது.

இதனால் கடந்த சில வருடங்களாக சறுக்கலில் இருந்த ரஜினிகாந்த் ஜெயிலர் மூலம் எழுந்து நின்றார். அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே அவர் தனது மகள் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடிக்க கமிட்டானார். படமானது பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடிக்க கமிட்டானார். ஏற்கனவே ஐஸ்வர்யா இயக்கிய 3, வை ராஜா வை ஆகிய படங்கள் சரியாக போகாததால் இந்தப் படத்தை ஹிட் படமாக்க வேண்டும் என்ற முனைப்பில் ஐஸ்வர்யா பணியாற்றியிருக்கிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

மொய்தீன் பாய் ரஜினிகாந்த்: இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கெஸ்ட் ரோல் என்றாலும் படத்தில் மொத்தம் ஒரு மணி நேரம்வரை வருவார் என்று கூறப்படுகிறது. மும்பையில் அவர் ஒரு தாதாவாக இருப்பார் என்றும் ஒரு பிரச்னையிலிருந்து விஷ்ணு விஷாலையும், விக்ராந்த்தையும் காப்பாற்றுவது போல் அவர் கதையில் பயணப்படுவார் என்றும் ஒரு பேச்சு ஓடுகிறது.

ஆடியோ லான்ச்: படமானது பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஏற்கனவே இப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகவிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்படிப்பட்ட சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னை சாய்ராம் கல்லூரியில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது. இதில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

சம்பளம்: இதற்கிடையே ஜெயிலர் படத்துக்கு முன்பு ரஜினிகாந்த் நடித்த தர்பார், அண்ணாத்த ஆகிய இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தன. இதனால் அவரது சூப்பர் ஸ்டார் நாற்காலி ஆட்டம் கண்டுவிட்டது என்றும்; சம்பளம் வெகுவாக குறைந்துவிட்டது என்றும் கோலிவுட்டில் தகவல் பரவியது. அதேசமயம் ஜெயிலர் படத்துக்காக அவர் 120 கோடி ரூபாய்வரை சம்பளம் வாங்கியதாகவும் ஒரு பேச்சு ஓடியது குறிப்பிடத்தக்கது.

லால் சலாம் சம்பளம்: இந்நிலையில் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் வாங்கியதாக ஒரு சம்பள தொகை கூறப்படுகிறது. அதன்படி இந்தப் படத்துக்காக அவர் 40 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றிருக்கிறாராம். இதனை கேள்விப்பட்ட கோலிவுட்டினர் வாயை பிளந்திருக்கிறார்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *