2023-ல் திருமண வாழ்க்கையில் நுழைந்த சின்னத்திரை நட்சத்திரங்கள்!
சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விட சின்னத்திரையில் தோன்றும் நடிகர் நடிகைகள் விரைவில் மக்கள் மனங்களில் இடம்பிடிக்கிறார்கள்.
இவர்கள் பெரும்பாலும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர்.
இந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட திருமண பந்தத்தில் இணைந்த சின்னத்திரை நட்சத்திரங்களின் பட்டியல்..
1. அஸ்வின் கார்த்தி – காயத்ரி
வானத்தைப்போல தொடரில் ராஜாபாண்டி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அஸ்வின் கார்த்தி, நீண்டகாலமாக காதலித்து வரும் காயத்ரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். காயத்ரி சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கு ஒப்பனை கலைஞராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு செப்.19 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
2.புஷ்பராஜ் – அக்ஷயா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பாரதி கண்ணம்மா தொடரின் முதல் பாகத்தில் அகிலன் கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் புஷ்பராஜ். இவர் நீண்ட நாள்களாக காதலித்து வந்த அக்ஷயா என்பவரை புஷ்பராஜ் கரம் பிடித்தார். இவர்கள் திருமணம் செப். 14 ஆம் தேதி நடைபெற்றது.
3. பிரியங்கா நல்காரி – ராகுல் வர்மா
ரோஜா தொடரின் மூலம் பிரபலமான பிரியங்கா நல்காரி, தொழிலதிபர் ராகுல் வர்மாவை மார்ச் 23 ஆம் தேதி செய்துகொண்டார். இவர்களின் திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோயிலில் நடைபெற்றது.
4. பிரிட்டோ மனோ – சந்தியா
ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் நடித்து புகழ்பெற்ற பிரிட்டோ மனோ, தவமாய் தவமிருந்து தொடரில் நடிக்கும்போது சக நடிகையான சந்தியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் இரு வீட்டார் சம்மத்துடன் ஜூலை 9 ஆம் தேதி நடைபெற்றது.
5 கிஷோர் – ப்ரீத்தி குமார்
பசங்க திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் கிஷோர், வானத்தைப்போல தொடரின் நடிக்கும் ப்ரீத்தி குமார் என்பவரை மார்ச் 23 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.
6. ராஜ வெற்றி பிரபு – தீபிகா
கனா காணும் காலங்கள் சீசன் 2-ல் அபி கதாபாத்திரத்தில் நடித்தவர் தீபிகா. இத்தொடரில் அபியின் நண்பர் கெளதம் கதாபாத்திரத்தில் நடித்தவர் ராஜ வெற்றி பிரபு. நீண்ட நாள்கள் நண்பர்களாக இருந்த இவர்கள், மே மாதம் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
7. இனியன் – ஜனனி பிரதீப்
கண்மணி, சிவா மனசுல சக்தி உள்ளிட்ட தொடரின் மூலம் பிரபலமானார் நடிகை ஜனனி பிரதீப். இவர் வித்யா நம்பர் ஒன் தொடரில் நடித்த பிரபல யூடியூபரான இனியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண விழாவில் சினிமா மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
8. கிங்ஸ்லி – சங்கீதா
பிரபல நகைச்சுவை நடிகரான ரெடின் கிங்ஸ்லி, சமீபத்தில் வந்து வெற்றி பெற்ற ஜெயிலர், மார்க் ஆண்டனி படத்திலும் நடித்திருந்தார். இவருக்கு சீரியல் நடிகையான சங்கீதாவைவுடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. நடிகை சங்கீதா அரண்மனை கிளி, திருமகள் உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.
9. தீனா – பிரகதி
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தீனா, பின்னர் தமிழ் சினிமாவில் பா பாண்டி படத்தில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். இவர் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த கிராஃபிக் டிசைனர் பிரகதியை ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டார்.
அரவிஷ் – ஹரிகா
சுந்தரி தொடரில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்த அரவிஷும், திருமகள் தொடரில் கதாநாயகியாக நடித்த ஹரிகாவும் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் கடந்த நவ.19 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.
சின்னத்திரையில் தோன்றும் பிரபலங்களை அவர்கள் ஏற்று நடிக்கும் தொடரின் கதாபாத்திரமாகவே பார்த்து, அவர்களோடு ரசிகர்களும் ஒரு வகையில் தங்களது வாழ்க்கையோடு தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள். இதனால்தான், சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கு திருமணம் நடந்தாலும், குழந்தைப் பிறந்தாலும் அவர்களின் மகழ்ச்சியை தங்களின் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு திருமணம் செய்திருக்கும் நட்சத்திர ஜோடிகள் வாழ்க்கை மகிழ்ச்சியாய் அமைய வேண்டும் என்பது சின்னத்திரை ரசிகர்களின் வாழ்த்துகளாக ஒலிக்கிறது.