Pa.Ranjith – யாரும் அப்படி பார்ப்பதில்லை.. அலர்ட் ஆகுறாங்க.. சென்சார் போர்டை கிழித்து தொங்கவிட்ட பா.இரஞ்சித்
சென்னை: இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ப்ளூ ஸ்டார்.
கடந்த வியாழக்கிழமை வெளியான இந்தப் படத்தில் விக்ராந்த், அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாம் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்துக்கு ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களையே கொடுத்தனர். இந்தச் சூழலில் படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடந்தது.
தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய இயக்குநர் பா.இரஞ்சித். ஒடுக்கப்பட்டவர்களின் குரல் பெரிய அளவில் ஒலிக்காத தமிழ் சினிமாவில் இரஞ்சித் வந்த பிறகுதான் அந்தக் குரல் சத்தமாக கேட்க ஆரம்பித்தது. அவர் எடுக்கும் ஒவ்வொரு படமும் சமூகத்தில் ஏதோவொரு உரையாடலை தொடங்கிவைக்கும். அந்த அளவுக்கு அவரது படத்தின் கருப்பொருள் அமைந்திருக்கும் என்பது அவரது தனிச்சிறப்பு.
தங்கலான் இரஞ்சித்: பா.இரஞ்சித் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கினார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக முகநூலில் வரும் கருத்துக்கள் பொல் நட்சத்திரம் நகர்கிறது படத்தை இரஞ்சித் இயக்கியிருக்கிறார் என கடும் விமர்சனம் எழுந்தது. அதனையடுத்து அவர் விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்குவதற்கு கமிட்டானார். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில் பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோரும் நடித்துவருகின்றனர்.
ஆஸ்கருக்கு செல்லும் இரஞ்சித்: பா.இரஞ்சித்தின் கனவுப் படமாக உருவாகும் இப்படத்தை ஆஸ்கருக்கு அனுப்பி வைக்கும் திட்டமும் படக்குழுவிடம் இருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது. அதனைப் பார்த்த ரசிகர்கள் நிச்சயம் தங்கலான் படம் தமிழ் சினிமாவின் பெருமை மிகு அடையாளமாக இருக்கும் என மகிழ்ச்சி தெரிவித்துவருகின்றனர். படமானது விரைவில் வெளியாகவிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் விக்ரமுக்கு மெகா ஹிட்டாக அமையும் என்றும் ரசிகர்கள் கருதுகின்றனர்.