கர்வ் இவி காரை இன்று தரிசனம் பண்ணலாம்! எங்கு எப்படி தெரியுமா?

டாடா நிறுவனம் இன்று நடக்கப் போகும் 2024 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ கண்காட்சியில் தனது கான்செப்ட் கார்களை வரிசையாக காட்சிப்படுத்த உள்ளன. இதன்படி நாம் டாடா கர்வ், நெக்ஸான் ஐசிஎன்ஜி கான்செப்ட் உள்ளிட்ட ஏராளமான கார்களை காண முடியும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த விரிவான விபரங்களை காண்போம் வாருங்கள்.

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ என்ற கண்காட்சி துவங்க உள்ளது. இங்கு ஆட்டோமொபைல் தொடர்பான பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் வாகனங்களை காட்சிப்படுத்த உள்ளன. ஆட்டோமொபைல் பிரியர்கள் மற்றும் ஆட்டோமொபைல் தொழிலில் இருக்கும் பலர் இந்த கண்காட்சியில் பங்கேற்று இது குறித்த தகவல்களை எல்லாம் பெற உள்ளனர்.

இந்நிலையில் டாடா நிறுவனமும் இந்த கண்காட்சியில் பங்கேற்பது தற்போது உறுதியாகி உள்ளது. அதன்படி எதிர்காலத்தில் டாடா நிறுவனம் வெளியிட போகும் வாகனங்களின் கான்செப்ட் வெர்ஷன்களை எல்லாம் இந்த எக்ஸ்போவில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் இந்த வாகனங்களை காண மக்கள் பலர் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

இதன்படி டாடா நிறுவனம் எக்ஸாம் ஐ சிஎன்ஜி கான்செப்ட், சஃபாரி டார்க் கான்செப்ட், டாடா கர்வ் கான்செப்ட், அல்ட்ராஸ் ரேசர் கான்செப்ட், பஞ்ச் இவி, நெக்சான் இவி டார்க் ஷோககார், ஹாரியர் இவி கான்செப்ட் ஆகிய கார்களை காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் டாடா நிறுவனம் தனது பாதுகாப்பு தொழில்நுட்பம் குறித்து தயாரிப்புகளையும் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

டாடா நிறுவனம் தனது கர்வ் காரின் கம்பஷன் இன்ஜின் வெர்ஷனை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வரும் நிலையில் தற்போது அதன் கான்செப்ட் வெர்ஷனை காட்சிப்படுத்துவது கிட்டத்தட்ட புரோடெக்ஷன் வெர்ஷன் ஸ்டைலிலேயே இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதற்கு முன்பு காட்சிப்படுத்தப்பட்ட காரிலிருந்து பல்வேறு மாற்றங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல டாடா ஹாரியர் இவி காரும் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. இது இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நெக்ஸான் காரில் ஐ சிஎன்ஜி மற்றும் டார்க் எடிசன் ஆகிய புரோட்டோ டைப்புகள் முதல் முறையாக காட்சிக்கு வர உள்ளன. இதனால் இந்த தயாரிப்புகள் மீது மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

டாடா நிறுவனத்தின் கர்வ் காரில் இதற்கு முன்பு காட்சிப்படுத்தப்பட்ட வெர்ஷனில் இருந்து உயரம் அதிகரிக்கப்பட்டு மஸ்குலரான கிளாடிங் கொடுக்கப்பட்டு வித்தியாசமான பாடி ஒர்க் செய்யப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம். முன்பக்கத்தில் ஸ்லிமான டிஆர்எல் வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக முக்கோண வடிவிலான ஹெட்லைட் டிசைன், டாடா நிறுவனத்தின் பிரத்தியேகமான எல்இடி லைட் இந்த காரில் முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காரின் இன்ஜினைப் பொறுத்தவரை 1.5லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இதே இன்ஜின் தான் நெக்ஸான் காரில் இருக்கிறது. இந்த இன்ஜின் 115 பிஎஸ் பவரையும் 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதே இன்ஜின் தான் புரோடெக்ஷன் வெர்ஷனிலும் வருமா என்பது சந்தேகம்தான். புரொடெக்ஷன் வெர்ஷன் வரும்போது பல்வேறு இன்ஜின் ஆப்ஷன்கள் இந்த காருக்கு வரும்.

டாடா ஹாரியர் இவி காரை பொறுத்தவரை 5 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி காராக காட்சிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். இது டூயல் மோட்டார் எலெக்ட்ரிக் செட்டப்புடன் ஆல்வில் டிரைவ் சிஸ்டத்துடன் காட்சிப்படுத்தப்பட அதிகமான வாய்ப்பு உள்ளது. கர்வ் இவி மற்றம் ஹாரியர் இவி கார்கள் ஒருமுறை சார் செய்தால் 500 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *