ஃபாஸ்ட் டேக் கார்டு கேஒய்சி செய்ய கால அவகாசம் நீட்டிப்பு! இன்னும் எத்தனை நாள் இருக்குது தெரியுமா?
இந்தியாவில் பாஸ்ட் டேக் கார்டுகளை கேஒய்சி செய்வதற்கான கடைசி தேதி ஜனவரி 31 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது பிப்ரவரி 29 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி கேஒய்சி செய்யப்படாத ஃபாஸ்ட் டேக் கார்டுகளை பயன்படுத்தி வரும் பயணங்கள் விரைவில் அதை கேஒய்சி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மார்ச் 1ம் தேதி முதல் கேஒய்சி செய்யப்படாத கார்டுகள் செயலிழகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு ஆங்காங்கே சுங்கச்சாவடிகளை அமைத்து சுங்க கட்டணத்தை வசூல் செய்து வருகிறது. சில ஆண்டுகள் முன்பு வரை நேரடியாக பணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் அதன் பின்னர் ஃபாஸ்ட் டேக் கார்டு கட்டாயமாக வாகனங்களுக்கு இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஃபாஸ்ட் டேக் கார்டுகள் உள்ள கார்கள் மட்டுமே சரியான விலையில் டோல்கேட்டுகளை கடக்க முடியும்.
தற்போது வரை ஃ பாஸ்ட் டேக் கார்டுகள் இல்லாத வாகனங்கள் கூடுதலாக கட்டணம் செலுத்தி தான் டோல்கேட்டுகளை கடக்க முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வாகன ஓட்டிகள் ஒரே வாகனத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபாஸ்ட் டேக் காடுகளை வாங்கி முறைகேடு செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டு வருவதாக தெரிகிறது.
இதைய எடுத்து மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் ஒரு வாகனத்திற்கு ஒரு ஃபாஸ்ட் டேக் என்ற புதிய திட்டத்தை அமல்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதன்படி வாகன ஓட்டிகள் எல்லாம் தங்கள் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை கேஒய்சி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் தற்போது புதிதாக வழங்கப்படும் கார்டு எல்லாம் கேஒய்சி செய்யப்பட்ட கார்டுகளாகவே வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மத்தியப் போக்குவரத்து அமைச்சகம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள கார்டுகளை கேஒய்சி செய்ய கடந்த ஜனவரி 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி இருந்தது. அதன் பின்னர் கேஒய்சி செய்யப்படாத கார்டுகள் எல்லாம் செயலிழக்கம் அல்லது பிளாக் லிஸ்ட் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றுடன் இதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில் இன்னும் கேஒய்சி செய்வதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால் இதற்கான கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி வரும் 29-ம் தேதி வரை ஃபாஸ்ட் டேக் பயனர்கள் தங்கள் கார்டுகளை கேஒய்சி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை கேஒய்சி செய்யப்படாத கார்டுகள் பிளாக் லிஸ்ட் செய்யவோ அல்லது செயலிழக்கம் செய்யவோ நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் உள்ள பயனர்களுக்கு கூடுதலாக 29 நாட்கள் அவகாசம் கிடைத்துள்ளது.
ஏற்கனவே கேஒய்சிக்காக விண்ணப்பித்த நபர்களுக்கு இந்த கால அவகாச காலகட்டத்திற்குள் விண்ணப்ப ஆவணங்கள் எல்லாம் சரிபார்க்கப்பட்டு கேஒய்சி செய்யப்பட்ட கார்டுகளாக அவை மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து கார்டை பயன்படுத்தி டோல்கேட்டுகளுக்கு பணம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக மாறி உள்ளது.
வாகன ஓட்டிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபாஸ்ட் டேக் கார்டுகளை வைத்திருக்கிறார்கள். சிலர் கேஒய்சி செய்யாமல் கார்டுகளை வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு கேஒய்சி செய்வதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது. இந்த சிக்கல்களை உணர்ந்து தான் மத்திய அரசு இந்த இதற்கான கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கூடுதலான இந்த காலகட்டத்திற்குள் கேஒய்சி செய்யும் வாய்ப்பை பெறுகிறார்கள்.
ஏற்கனவே வெளியிட்ட அறிவித்தின்படி சில வாகன ஓட்டிகள் தங்கள் ஃபாஸ்ட் டேக் கார்டை கேஒய்சி செய்துள்ளன.ர் அதன்படி தற்போது ஏ7 லட்சம் கார்டுகள் ஃபாஸ்ட் டேக் பட்டியலில் இருந்து செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளன. இவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் ஒரே வாகனத்திற்கு இரண்டு ஃபாஸ்ட் டேக் கார்டுகளாக பயன்படுத்திய கார்டுகள் ஆகும். இன்னும் 1.20 கோடி காட்டுகள் கேஒய்சி செய்யப்படாமல் உள்ளன.