இந்தியாவுக்கு அடுத்த ஆப்பு ரெடி.. வில்லனை களமிறக்கிய இங்கிலாந்து.. இவரை பார்த்தாலே பயம் வருதே!
James Anderson : இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இங்கிலாந்து வீரர்களின் பிளேயிங் லெவனை அந்த அணி 24 மணி நேரத்திற்கு முன்பே அறிவித்திருக்கிறது.
முதல் டெஸ்டில் இந்தியாவை வீழ்த்திய நிலையில் இரண்டாவது டெஸ்டில் கடும் நெருக்கடி கொடுக்கும் விதமாக இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.
இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. முதல் டெஸ்டில் களமிறங்கிய அனுபவ சுழற் பந்துவீச்சாளர் ஜாக் லீச் காயம் காரணமாக இரண்டாவது போட்டியில் பங்கேற்கவில்லை. ஜாக் லீச், அனுபவ வீரராக இருந்து முதல் டெஸ்டில் இரண்டு விக்கெட் மட்டுமே மொத்தமாக வீழ்த்தினார்.
எனினும் ரன்களை ஒரு முனையில் இருந்து கட்டுப்படுத்தி மற்ற வீரர்களுக்கு விக்கெட்டுகளை எடுக்க உதவினார். இந்த நிலையில் ஜாக் லீச்சுக்கு பதிலாக அறிமுக வீரர் சோயிப் பஷீர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இவருக்கு முதல் டெஸ்டில் விசா கிடைக்காத காரணத்தினால் பங்கேற்காமல் இருந்தார். இந்த நிலையில் முதல் டெஸ்டில் எந்த விக்கெட்டையும் எடுக்காத மார்க் வுட் அணியிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஆண்டர்சன் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆண்டர்சனை கண்டாலே, இந்திய அணி வீரர்கள் பயப்படுவார்கள். ஏனென்றால் இங்கிலாந்து அணியிலேயே அதிக அனுபவம் வாய்ந்த வீரர் என்றால் அது ஆண்டர்சன் தான். இதுவரை இந்தியாவுக்கு ஐந்து முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது ஆறாவது முறையாக விளையாடுகிறார்.