புலம்பெயர் மக்களின் மரணம்… ஐரோப்பிய நாடொன்றிற்கு எதிராக ஐ.நாவிடம் அகதி ஒருவர் புகார்
புலம்பெயர் மக்கள் விவகாரத்தில் ஸ்பெயின் அரசாங்கம் அனைத்து விதிகளையும் மீறியுள்ளதாக கூறி 25 வயதேயான அகதி ஒருவர் ஐ.நாவிடம் புகார் அளித்துள்ளார்.
ஸ்பெயின் எல்லைக்குள்
2014ல் மொராக்கோவில் இருந்து ஸ்பெயின் எல்லைக்குள் நுழைய முயன்றபோது குறைந்தது 15 பேர் இறந்த சம்பவத்திற்கு நீதி வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
மொராக்கோ நாட்டவரான அந்த 25 வயது நபர் தெரிவிக்கையில், ஒரு தசாப்தம் கடந்துவிட்டது, இன்னும் பலரின் இறப்பு மற்றும் காயங்களுக்கு ஒரு நபர் கூட பொறுப்பேற்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் மூன்று நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன, ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பம் அல்லது உயிர் தப்பியவர்கள் என எவரிடமும் தங்கள் கருத்தினை விசாரணை அதிகாரிகள் பெறவில்லை என்றே அந்த நபர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், அன்று எல்லையில் நடந்த வன்முறை நீதிமன்றத்தில் தொடர்ந்தது, அங்கும் எங்களை மனிதர்களாக நடத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மொராக்கோவில் இருந்து ஸ்பானியப் பகுதியான சியூட்டாவுக்குச் செல்ல முயன்ற சுமார் 200 பேருடன் அவர் இணைந்தபோது அவருக்கு 15 வயது.
15 பேர்கள் கொல்லப்பட்டனர்
சுமார் 18 மாதங்கள் உதவ எவருமின்றி, எந்த ஆவணங்களும் இன்றி மிகக் கடுமையான வாழ்க்கையை அந்த ஆப்பிரிக்க நாட்டில் வாழ்ந்ததாகவும், அதன் பின்னரே ஸ்பெயின் நாட்டிற்கு புறப்பட்டதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.
ஆனால் சம்பவத்தன்று ஸ்பெயின் பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 15 பேர்கள் கொல்லப்பட்டனர், பலர் காயங்களுடன் தப்பினர். 2019ல் ஏற்கனவே இருமுறை விசாரணைக்கு பின்னர், 16 பொலிசார் மீது நீதிமன்றம் குற்றஞ்சாட்டியது.
இதனிடையே, அந்த மொராக்கோ இளைஞர் ஜேர்மனியில் குடியேறியதுடன், அங்குள்ள அரசாங்கம் அடைக்கலம் அளிக்கவும் உறுதி அளித்துள்ளது. தற்போது இந்த விவகாரம் தொடர்பில் ECCHR ஆதரவுடன் ஐ.நாவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.