“சமியால் பும்ராவுக்கு பிரச்சனையா?.. நான் அவருக்கு சல்யூட் பண்றேன்” – இர்பான் பதான் வெளிப்படையான பேச்சு
தற்போதைய இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு யூனிட்டில் முகமது சிராஜ் மற்றும் ஜஸ்ட்பரித் பும்ரா இருவரும் பிளேயிங் லெவனில் இடம் பெற்று விளையாடுகிறார்கள்.
15 பேர் கொண்ட அணியில் முகேஷ் குமார் மற்றும் ஆவேஸ் கான் இருவரும் வெளியில் அமர்ந்திருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் இந்தத் தொடரில் வாய்ப்பு என்பது கொஞ்சம் கடினம்.
அதே சமயத்தில் தற்பொழுது இரண்டு போட்டிகளுக்கு மட்டுமே இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மீதம் இருக்கும் மூன்று போட்டிகளுக்கும் முகமது சமி திரும்புவதற்கான வாய்ப்புகள் குறித்து பார்க்கப்படுகிறது.
பும்ரா மற்றும் சமி இருப்பது இருவருக்குமே பந்துவீச்சில் நல்ல வாய்ப்புகளை உருவாக்குவதற்கு சாதகமாக இருக்கும். தற்பொழுது சமி இல்லாதது பூம்ரா மேல் அழுத்தமாக மாறுகிறதா? என்கின்ற கேள்வி இருக்கிறது.
இதன் காரணமாக பும்ரா காயம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறதா? இந்திய சூழ்நிலையில் வேகப்பந்துவீச்சாளரான அவரைத் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வைப்பது நல்லதா? என்பது குறித்து விவாதங்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில், இர்ஃபான் பதான் இது குறித்து பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது ” சமி இல்லாதது பும்ராவுக்கு காயத்தை உருவாக்கும் என்பது கிடையாது. பும்ராவின் பவுலிங் ஆக்சன் தற்பொழுது மிகச் சரியாக இருக்கிறது. இரண்டு முனைகளில் இருந்து இருவரும் பந்து வீசும் போது ஒருவருக்கொருவர் உதவி கொள்கிறார்கள். இதன் காரணமாக ஒருவருக்கு விக்கெட்டுகள் கிடைக்கிறது.
ஆனால் தற்பொழுது சமி இல்லாததால் விக்கெட் எடுப்பதில் அணிக்கு பின்னடைவு உருவாகி இருக்கிறது. ஆனால் அவர் இல்லாததால் பும்ராவுக்கு காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கிடையாது.