விக்கெட்டே எடுக்காத அவரை தூக்கிட்டு குல்தீப் யாதவை சேருங்க.. இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுத்த – பார்த்திவ் படேல்
கடந்த ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்கிய இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 246 ரன்களை மட்டுமே குவித்தது.
அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணி 436 ரன்களை குவித்தது.
பின்னர் 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை இங்கிலாந்து அணி விளையாடியது. அப்படி பின்தங்கிய நிலையில் இருந்து விளையாடி இருந்தாலும் ஒல்லி போப்பின் மிகச்சிறப்பான ஆட்டம் காரணமாக அந்த அணி 400 ரன்களுக்கு மேல் குவித்தது.
அதோடு மட்டுமின்றி 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினையும் இந்திய அணிக்கு நிர்ணயித்தது. அதை எதிர்த்து விளையாடிய இந்திய அணி வெற்றிக்கு அருகில் வந்து 202 ரன்கள் மட்டுமே குவித்தது. அதன்காரணமாக இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் முதல் இன்னிங்ஸில் நான்கு ஓவர்களும், இரண்டாவது இன்னிங்ஸில் ஏழு ஓவர்களை மட்டுமே வீசியிருந்தார். அப்படி பந்துவீசிய அவருக்கு ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை.
இந்நிலையில் முகமது சிராஜை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக குல்தீப் யாதவை சேர்த்துக் கொள்ளுமாறு இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் பட்டேல் சில கருத்துக்களை பகிர்ந்து உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :
முகமது சிராஜை விட குல்தீப் யாதவ் கணிதமாக பேட்டிங் செய்யக் கூடியவர். அதோடு அவரால் பந்து வீச்சிலும் இந்திய அணிக்கு கைகொடுக்க முடியும். எனவே விக்கெட்டே எடுக்காத முகமது சிராஜுக்கு பதிலாக குல்தீப் யாதவை இரண்டாவது போட்டிக்கான அணியில் சேர்க்க வேண்டும் என பார்த்திவ் படேல் கூறியது குறிப்பிடத்தக்கது.