பந்து கொஞ்சம் பவுன்ஸ் ஆன கூட இந்த பையனுக்கு விளையாட தெரியல. சுப்மன் கில் குறித்து ஓபனாக பேசிய முகமது கைஃப் !!
டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து சொதப்பி வரும் சுப்மன் கில் தனது பேட்டிங்கில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் மிக சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து அணி மீது ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் கடுமையாக திணறியது. ரோஹித் சர்மா உள்பட நட்சத்திர வீரர்கள் பலரும் தங்களது பங்களிப்பை செய்ய தவறியதால் இறுதியாக இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இலகுவாக வெற்றி பெற வேண்டிய போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதால் முன்னாள், இந்நாள் வீரர்கள் பலரும் இந்திய அணியின் தோல்வி குறித்தான தங்களது கருத்துக்கள தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.