ஒரே மாதத்தில் தொப்பை கரைய… கை கொடுக்கும் ‘சூப்பர்’ யோகாசனங்கள்!
வேலை என்று ஓடி கொண்டிருக்கும் நாம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த மறந்து விடுகிறோம். பசி எடுக்கும் நேரத்தில் சாப்பிடாமல், நேரம் கிடைக்கும் நேரத்தில் சாப்பிடுவதால் பிரச்சனைகள் வரும் பிரச்சனைகள் ஏராளம். அதில் ஒன்று தான் உடல் பருமன்
சரியான நேரத்தில் தூங்காதது சரியான நேரத்தில் சாப்பிடாதது ஆகியவை, உடல் பருமனுக்கு முக்கிய காரணம் என்கின்றனர் நிபுணர்கள். உடல் பருமன் பிரச்சனையில் இருந்து விடுபட யோகா நமக்கு கை கொடுக்கும். சில எளிய யோகாசனங்கள் மூலம் உடல் பருமனையும் தொப்பை கொழுப்பையும் எளிதாக கரைக்கலாம். ஒரு மாதத்திலேயே பலனை கண்கூடாக பெறலாம். உடல் பருமன் மற்றும் கொழுப்பை கரைக்கும்
பிரத்யேக யோகாசனங்களை அறிந்து கொள்ளலாம்.
விருக்ஷாசனம்
மரம் போன்ற நிலையில் நிற்கும் விருக்ஷாசனம் கொழுப்பை கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆசனத்தை காலையில் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆசனத்தை செய்ய முதலில் நேராக நிற்க வேண்டும். பின்னர் ஒரு பாதத்தை மற்றொரு பாதத்தின் தொடையின் மீது வைக்க வேண்டும். இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு வணக்கம் என்ற தோரணையில் கைகளை இணைத்து நிற்க வேண்டும்.
பாலாசனம்
பாலாசனம் தொப்பையை கரைத்து தசைகளை பலப்படுத்தும் சிறப்பான ஆசனம் ஆகும். யோகாசனம் செய்வதை புதிதாக தொடங்குவோம் தொடங்குபவர்களுக்கு இது மிகச் சிறந்த ஆசனம். உங்கள் முழு உடலும் குதிகாலின் மீது இருக்கும் படி முழங்காலை வளைத்து தரையில் உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்கள் மார்பு தொட வேண்டும். அதோட உங்கள் நெற்றியினால் தரையை தொட முயற்சிக்க வேண்டும். சில வினாடிகள் நீடித்து நின்றபின் இயல்பு நிலைக்கு வரவும். எனினும், முழங்கால் வலி இருப்பவர்கள் கர்ப்பிணிகள் ஆகியோர் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.