Doctor Vikatan: கர்ப்பிணிகளை ஒருக்களித்துப் படுக்கச் சொல்வது ஏன்?
Doctor Vikatan: நான் 4 மாத கர்ப்பிணி. என் அம்மா என்னை இயல்பாகப் படுத்து உறங்க அனுமதிக்க மறுக்கிறார்.
கர்ப்பிணிகள் ஒருக்களித்துதான் படுக்க வேண்டும், அதுதான் குழந்தைக்கு நல்லது என்கிறார். இது எந்த அளவுக்கு உண்மை? வேறு பொசிஷன்களில் படுத்துத் தூங்குவது தவறானதா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ரம்யா கபிலன்.
டாக்டர் ரம்யா கபிலன்Doctor Vikatan: PCOD எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி உள்ளவர்களால் கருத்தரிக்க முடியுமா?
கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில் (முதல் டிரைமெஸ்டர்) இருக்கும்போது எந்த பொசிஷனில் வேண்டுமானாலும் தூங்கலாம். அதாவது, உங்களுக்குப் பிடித்த, வசதியான எந்த நிலையிலும் தூங்கலாம். ஒருக்களித்தும் படுக்கலாம், மல்லாந்தும் படுக்கலாம், குப்புறகூட படுத்தும் தூங்கலாம், பிரச்னையில்லை.
முதல் மூன்று மாதங்களில் எந்த பொசிஷனில் படுத்து உறங்கினாலும் பெரும்பாலும் கர்ப்பிணிகளுக்கு அது எந்த சிரமத்தையும் தருவதில்லை. அதுவே, இரண்டாவது, மூன்றாவது டிரைமெஸ்டரில், ஒருக்களித்துப் படுத்து உறங்குவதுதான் சரியானது. அதிலும் குறிப்பாக, இடப்பக்கமாக ஒருக்களித்துப் படுத்துத் தூங்குவதே சரியானது. அது சௌகர்யமாகவும் இருக்கும், அந்த பொசிஷன் பாதுகாப்பானதும்கூட.