கிளாம்பாக்கம் கிடையாதா? மீண்டும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு? தமிழக அரசு என்ன சொல்ல போகுதோ? “ஆதங்க ஆம்னி”
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், நீதிமன்ற தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றன தனியார் பேருந்து நிறுவனங்கள்.
இதுகுறித்து இன்றைய தினம் தமிழக அரசு என்ன முடிவெடுக்க போகிறது?
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்டிலிருந்துதான், தென் …மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் பஸ்களை இயக்க வேண்டும் என்று கடந்த 24ம் தேதி, போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டார்.
ஆனால், இதற்கு ஆம்னி பஸ் தரப்பில் ஒப்புக் கொள்ளவில்லை.. எனவே, இதை எதிர்த்து, ஆம்னி பஸ் நிறுவனமான, “ஒய்.பி.எம்., டிராவல்ஸ்” சென்னை ஹைகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.
மனு தாக்கல்: அந்த மனுவில், “கடந்த 2002ல் கோயம்பேடில் பஸ் நிலையம் கட்டப்பட்ட பின், அங்கிருந்து தான் அனைத்து ஆம்னி பஸ்களையும் இயக்க வேண்டும் என, போக்குவரத்து ஆணையர் மற்றும் மாநகர போலீஸ் ஆணையர் உத்தரவிட்டனர். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசு உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
அதன்படி, சென்னைக்குள் ஆம்னி பஸ்கள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது, கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்தில் இருந்துதான், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களை இயக்க வேண்டும் என்ற உத்தரவால், பயணியர் மட்டுமின்றி, பஸ் நிறுவனங்களுக்கும் அசவுகரியம் ஏற்பட்டுள்ளது.
ஆம்னி பஸ்கள்: சென்னை நகருக்குள் ஆம்னி பஸ்கள் நுழைய தடை விதிப்பது, 2003ல் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறுவதாகும். எனவே, போக்குவரத்து துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பயணியரை ஏற்றி, இறக்க அனுமதிக்க வேண்டும்” என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.