‘ஃபாஸ்டேக் கணக்கை தொடரலாம்’ – பயனர்களுக்கு பேடிஎம் நிறுவனம் விளக்கம்
புதுடெல்லி: வரும் பிப்ரவரி 29-ம் தேதியுடன் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை சார்ந்த செயல்பாடுகளை நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், ஃபாஸ்டேக் சேவை குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஆர்பிஐ உத்தரவுகள் பயனர்களின் சேவைக் கணக்குகள், வாலட்கள், ஃபாஸ்டேக் மற்றும என்சிஎம்சி கணக்குகளின் வைப்புத் தொகைகளை பாதிக்காது. அவர்கள் ஃபாஸ்டேக் கணக்கை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வரும் பிப்ரவரி 29-ம் தேதியுடன் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை சார்ந்த செயல்பாடுகளை நிறுத்துமாறு புதன்கிழமை ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது. பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வந்த காரணத்தினால் இந்த தடை உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் பேடிஎம் செயலி மூலம் பயனர்கள் யுபிஐ முறையில் பணத்தை அனுப்பவும், பெறவும் முடியும். அதன் இயக்கம் வழக்கம் போலவே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, பேடிஎம் நிறுவனம் ஃபாஸ்டேக் கணக்குகளில் உள்ள பணத்தை பயனர்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று விளக்கம் அளித்துள்ளது. ஆர்பிஐ நடவடிக்கையைத் தொடர்ந்து, பேடிஎம் நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், அதன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன் லிமிட். (OCL) பல்வேறு வங்கிகளுடன் இணைந்து செயல்படுவதாக தெரிவித்துள்ளது. அதில், “ஒசிஎஸ் மற்றும் பேடிஎம் பேமென்ட்ஸ் சர்வீஸ் லிமிட்.