ஐடி – டெக் ஊழியர்கள் பட்ஜெட் 2024ல் எதிர்பார்ப்பது இதுதான்.. ஆனா கிடைத்தது என்ன..?
இடைக்காலப் பட்ஜெட் அறிவிப்புகள் இந்தியாவின் தொழில்நுட்ப துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிகப்படியான வொயிட் காலர் வேலைவாய்ப்புகள் உருவாக்குவது மட்டும் அல்லாமல் நாட்டின் தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்துவது இந்தத் துறை தான். இந்திய ஐடி மற்றும் டெக் துறை இந்த இடைக்காலப் பட்ஜெட்டில் முக்கிய எதிர்பார்ப்புகள் இதுதான், சைபர்செக்யூரிட்டி சிக்கல்களைத் தீர்ப்பது, இன்னோவேஷன்-க்கு முக்கியத்துவம் கொடுப்பது மற்றும் திறமையான பணியாளர்களை உருவாக்குவதுடன், இத்துறைக்கான திறமையான கட்டமைப்பை உருவாக்குவது தான். இந்தப் பட்ஜெட் மூலம் நாட்டின் ஸ்டார்ட்அப் எகோசிஸ்டத்தை மேம்படுத்த வேண்டும்.
மேலும் AI, பிளாக்செயின் போன்ற புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யவும், அதைச் சார்ந்த சேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பள்ளி மற்றும் கல்லூரி அளவில் இருந்தே அதற்கான கல்வி முறையை வலியுறுத்த வேண்டும். இதேபோல் AI, பிளாக்செயின் போன்ற புதிய தொழில்நுட்பங்களில் உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஒழுங்குமுறை செயல்முறைகளை எளிதாக்குவது, உள்கட்டமைப்பை அதிகரிப்பது மற்றும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குவது மிக முக்கியமானது.