10 ஆண்டு கால ஆட்சி.. 10 சாதனை.. கட்டம் கட்டி அடித்த நிதி அமைச்சர்..!
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக மத்தியில் அமைந்த பாஜக ஆட்சி விரைவில் முடிவுக்கு வருகிறது.
இதனை அடுத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்த உடன் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இடைக்கால பட்ஜெட் என்பதால் பெரிய அளவிலான அறிவிப்புகள் எதுவும் இடம்பெறாது என கணிக்கப்பட்டாலும், சில முக்கியமான அறிவிப்புகள் முதலீட்டு சந்தையை பெரிய அளவில் கவர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக பத்திர முதலீட்டு சந்தை, உள்கட்டமைப்பு துறை, கிரீன் எனர்ஜி துறை, ரியல் எஸ்டேட் துறைக்கு சாதகமாக உள்ளது. நிர்மலா சீதாராமன்: பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறது. இதில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 6ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 5 முழுமையான பட்ஜெட் மற்றும் ஒரு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய சாதனை படைதுள்ளார்.
10 ஆண்டுகளில் சாதித்தது என்ன? கடந்த 10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான மத்திய அரசு பொருளாதார ரீதியாக என்னென்ன சாதித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்தார். அவர் பட்டியலிட்ட 10 முக்கிய சாதனைகளை பார்க்கலாம். 1. கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் சராசரி வருமானம் 50% உயர்ந்துள்ளது என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். 2. பிரதமர் மோடி தலைமையிலான அரசு தான் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அமல்படுத்தியது.