ஆடு ஜீவிதம் படத்துக்கான பிருத்விராஜின் அர்ப்பணிப்பு: டீசர் எப்போது?
மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடு ஜீவிதம் நாவலை (தி கோட் லைஃப்) படமாக எடுத்துள்ளார்கள். இதில் அமலா பால் ப்ரித்விராஜுடன் நடித்துள்ளார்.
பிளெஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார்.
மலையாளத்திலிருந்து தமிழிலும் ஆடு ஜீவிதம் நாவல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து அரபு நாட்டுக்கு வயிற்றுப் பிழைப்புக்காகச் செல்லும் இருவர், அரேபியர்களிடம் மாட்டிக்கொண்டு ஆட்டுப் பட்டிகளில் ஆடுகளாகவே வாழ்ந்த துயரக் கதைதான் இந்த நாவலின் கதைக்கரு. 2010-ம் ஆண்டுக்கான கேரள சாகித்ய அகாதெமி விருதினை இந்நாவல் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்படம் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
நஜீப் கதாபாத்திரத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ளார். இதற்காக 3 விதமாக உடலை மாற்றியுள்ளார். இந்தப் படத்துக்காக பிருத்விராஜ் சுமார் 30 கிலோ எடையை குறைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.