பாரிஸை அடுத்து பிரஸ்ஸல்ஸ் மீது திரும்பிய வேளாண் மக்களின் கோபம்: டிராக்டர்களால் ஸ்தம்பித்த தெருக்கள்

அதிக வரி, தரமற்ற இறுக்குமதி, பசுமை விதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் செவிசாய்க்க வேண்டும் என வலியுறுத்தி பிரஸ்ஸல்ஸ் நகரில் திரண்ட வேளாண் மக்களால் அங்குள்ள தெருக்கள் ஸ்தம்பித்துள்ளன.

வேளாண் மக்கள் இல்லை என்றால்
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் தங்கள் விவகாரத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் பெல்ஜியம் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த விவசாயிகள் வியாழக்கிழமை பிரஸ்ஸல்ஸ் நகரில் திரண்டனர்.

பூமியை நேசிப்பவர் என்றால், அதை பராமரிப்பவர்களையும் நீங்கள் ஆதரிக்க வேண்டும் என விவசாயி ஒருவர் பதாகையை தனது டிராக்டரில் காட்சிப்படுத்தியுருந்தார். வேளாண் மக்கள் இல்லை என்றால் ஏது உணவு என இன்னொருவரின் டிராக்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு டிராக்டர்களுடன் திரண்ட வேளாண் மக்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். சுமார் 1,000 டிராக்டர்கள் பிரஸ்ஸல்ஸ் தெருவில் சாலைகளை முடக்கியதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தில் தலைவர்களின் கூட்டம் முன்னெடுக்கப்பட்டுவருவதை அடுத்து, பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. விவசாயி ஒருவர் தெரிவிக்கையில்,

இன்று நாம் இங்கு எத்தனை பேருடன் இருக்கிறோம் என்பதை நீங்கள் பார்த்தால், ஐரோப்பா முழுவதும் இதுபோன்ற ஒரு நிலை இருப்பதை நீங்கள் பார்த்தால், உங்களுக்கு நம்பிக்கை பிறக்கும். விவசாயம் அவசியம் என்பதையும் அதை இவர்கள் உரியமுறையில் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையும் இருக்க வேண்டும்.

பல வாரங்களாக போராட்டம்
இது உணவுக்கான போராட்டம், உங்களுக்குத் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தங்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என குறிப்பிட்டுள்ள விவசாயிகள், வரி மற்றும் பசுமை விதிகளால் திணறி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பிரான்சில், விவசாயிகள் பல வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய டீசல் மீதான மானியங்களை படிப்படியாக குறைக்கும் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டது மற்றும் கூடுதல் உதவிகளை உறுதியளித்துள்ளது.

இருப்பினும் இது போதுமானதாக இல்லை என பிரான்ஸ் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் பெல்ஜியம், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளில் போராட்டங்கள் பரவின.

ஜூன் மாதம் ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஐரோப்பா முழுவதும் வேளாண் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருக்வது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *