இனி நடக்காது.. எழுந்து நின்று மன்னிப்பு கேட்ட மார்க் ஜூக்கர்பெர்க்: ஏன் தெரியுமா?
செனட் சபையில் ஏராளாமான பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்த நிலையில் பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கோரியுள்ளார்.
பெற்றோர்கள் கவலை
தற்போதைய காலத்தில் நாம் அதிகப்படியான நேரங்களை சமூக வலைதளங்களில் செலவழித்து வருகிறோம். அதில், குழந்தைகளும் அதற்கு அடிமையாக தொடங்குகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க செனட் சபையின் நீதித்துறை குழு முன்பு பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் ஆஜராகி சமூக வலைதளங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது அங்கிருந்த பெற்றோர்கள் ஏராளமானோர், “தங்களுடைய குழந்தைகள் பலரும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றால் தகாத உறவுகளுக்கு ஆளாகி தற்கொலை செய்யும் முடிவை எடுக்கின்றனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்” என்று கேட்டனர்.
மன்னிப்பு கேட்ட மார்க்
இதற்கு பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் சபையில் எழுந்து நின்று பெற்றோர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
பின்னர் பேசிய அவர், “நீங்கள் அனுபவித்துள்ள பிரச்சனைகளுக்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி இதுபோன்ற தவறுகள் கடந்து செல்ல கூடாது. குழந்தைகளின் பாதுகாப்புக்கு மெட்டா நிறுவனம் முயற்சிகளை எடுத்து வருகிறது” என்றார்.