ஜேர்மனியில் பணி செய்ய ஆசைப்பட்ட ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள்: வந்தபின் என்ன கூறியுள்ளார்கள் தெரியுமா?
ஜேர்மனியில் பணி செய்ய ஆசைப்படுவதாக ஆய்வொன்றில் தெரிவித்த 30,000 வெளிநாட்டவர்களில், 5 சதவிகிதத்தினர்தான் ஜேர்மனிக்கு வந்துள்ளார்கள் என்பது ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. வந்தவர்கள் என்ன கூறியுள்ளார்கள் தெரியுமா?
பொருளாதாரக் கூட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு, 2022ஆம் ஆண்டு ஆகத்து மாதம் முதல், ஆய்வொன்றை மேற்கொண்டு வந்தது.
வெளிநாட்டவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில் 30,000 திறன்மிகுப் பணியாளர்கள், ஜேர்மனியில் பணி செய்யும் ஆசையை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
ஜேர்மனியால் தாங்கள் ஈர்க்கப்படுவதாக அவர்கள் ஆய்வில் கூறியிருந்த நிலையில், ஓராண்டுக்குப் பின் கணக்கெடுத்துப் பார்க்கும்போது, உண்மையில் அவர்களில் 5 சதவிகிதத்தினர் மட்டுமே பணி செய்வதற்கு ஜேர்மனியைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.
வந்தபின் அவர்கள் என்ன கூறியுள்ளார்கள் தெரியுமா?
30,000 பேர் தாங்கள் பணி செய்ய விருப்ப நாடாக ஜேர்மனியைத் தேர்ந்தெடுப்போம் என்று கூறியிருந்த நிலையில், அவர்களில் 5 சதவிகிதத்தினர்தான் ஜேர்மனிக்கு வந்துள்ளார்கள்.
அந்த 5 சதவிகிதத்தினரும்கூட, ஜேர்மனிக்கு வந்தபின், தாங்கள் ஜேர்மனியில் இனவெறுப்பு மற்றும் பாரபட்சத்தை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்கள்.
அவர்களில் பாதிபேர், வீடு வாடகைக்குப் பிடிக்க முயலும்போதும், வீடு வாங்க முயலும்போதும் தாங்கள் பாரபட்சத்தை எதிர்கொண்டதாகத் தெரிவிக்கிறார்கள்.
37 சதவிகிதத்தினர் தாங்கள் உணவகங்களில் உணவருந்தச் செல்லும்போதும், கடைகளுக்குச் செல்லும்போதும் பாரபட்சமாக நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்கள்.
பொலிசார் தங்களை பாரபட்சமாக நடத்தியதாக 15 சதவிகிதத்தினரும், அலுவலகங்களில் தாங்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டதாக 28 சதவிகிதத்தினரும் தெரிவித்துள்ளார்கள்.
வெளிநாட்டவர்களைக் கவர பல்வேறு நடவடிக்கைகளை ஜேர்மனி இப்போதும் எடுத்துவருகிறது. ஏனென்றால், அவர்களுக்கு வேலை செய்ய ஆட்கள் தேவை. ஆனால், வேலை செய்யச் செல்வோரையோ பாரபட்சமாக நடத்துகிறார்கள். இது ஜேர்மனியில்தான் என்றில்லை, பல நாடுகளில் இதே நிலைமை நிலவுவதை செய்திகள் மூலம் அறிகிறோம்.
அதாவது, வெளிநாட்டவர்கள் எங்கள் நாட்டுக்கு வாருங்கள், எங்களுக்காக வேலை செய்யுங்கள், சம்பளத்தை வாங்கிக்கொண்டு போய்க்கொண்டே இருங்கள், சமத்துவம், மரியாதையை எல்லாம் எதிர்பார்க்காதீர்கள் என்று சொல்வது போல் இருக்கிறது!