இது ஏற்றுக்கொள்ள முடியாதது, வன்மையாக கண்டிக்கிறேன்! கொந்தளித்த ஜஸ்டின் ட்ரூடோ
Mississauga மசூதிக்கு எதிரான தாக்குதல், கியூபெர்க் நகர மசூதி தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அறிக்கை
கடந்த ஜனவரி 29ஆம் திகதி கியூபெக் நகர மசூதி தாக்குதல் மற்றும் Islamophobia-விற்கு எதிரான நடவடிக்கையின் தேசிய நினைவு தினத்தில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், ‘ஏழு ஆண்டுகளுக்கு முன்பு Sainte-Foy யில் உள்ள சென்டர் Culturel islamique de கியூபெக்கில், துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தாக்குதலில் Ibrahima Barry, Mamadou Tanou Barry, Khaled Belkacemi, Abdelkrim Hassane, Azzedine Soufiane
மற்றும் Aboubakar Thabti ஆகியோர் தங்கள் உயிரை இழந்தனர்.
அவர்கள் மகன்கள், சகோதரர்கள், தந்தைகள் மற்றும் நண்பர்கள், பெருமைமிக்க இஸ்லாமியர்கள், Quebecers மற்றும் கனேடியர்கள். ஆனால், அவர்கள் இஸ்லாமியர்கள் என்ற காரணத்தினால் தான் குறிவைக்கப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29 அன்று, இந்த கொடூரமான வெறுப்பு செயலால் நாம் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்’ என தெரிவித்தார்.
கவலையளிக்கிறது
இந்த நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘வழிபாட்டுத் தலங்கள் சமூக மக்கள் கூடும் பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும்.
இந்த வார தொடக்கத்தில் Mississauga மசூதிக்கு எதிரான தாக்குதல் – கியூபெக் நகர மசூதி தாக்குதல் மற்றும் தேசிய நினைவு தினத்தில் Islamophobia-விற்கு எதிரான நடவடிக்கை கோழைத்தனமானது, கவலையளிக்கிறது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். Islamophobia-விற்கு நமது எந்த சமூகத்திலும் இடமில்லை’ என தெரிவித்துள்ளார்.
Places of worship should be safe spaces for community members to gather. The attack against a Mississauga mosque earlier this week – on the National Day of Remembrance of the Quebec City Mosque Attack and Action Against Islamophobia – is cowardly, disturbing, and unacceptable. I…
— Justin Trudeau (@JustinTrudeau) February 1, 2024