ஜப்பானில் மீண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விமானங்கள்! அலறிய பயணிகள்

ஜப்பானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்து பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நேருக்கு நேர் மோதல்
ஒசாகாவில் இடாமி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

அந்த வகையில் மட்சுயமா நகருக்கு செல்ல விமானம் ஒன்று தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது புகுவோகாவில் இருந்து கிளம்பிய ஆல் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் தரை இறங்கியது.

ஆனால், விமான கட்டுப்பாட்டு அறையின் தவறான சமிக்ஞைகளால், அந்த விமானம் தரையிறங்கும்போது ஏற்கனவே புறப்பட தயாராக இருந்த விமானத்தின் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் இரண்டு விமானங்களிலும் முன்பக்க இறக்கைகள் சேதம் அடைந்தன. எனினும் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதனைத் தொடர்ந்து விபத்திற்குள்ளான விமானங்களில் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

விமான சேவை தடை
இச்சம்பவத்தினால் இடாமி விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் விமான சேவை தடைபட்டது.

கடந்த மாதம் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில், பயணிகள் விமானம் தரையிறங்கும்போது ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கடலோர பாதுகாப்பு விமானத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்.

அதேபோல் கடந்த 16ஆம் திகதி நியூ சிந்தோஸ் விமான நிலையத்தில் தென்கொரிய விமானம் ஒன்று, கேத்தே பசிபிக் விமான நிறுவனத்தின் விமானத்துடன் மோதி விபத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *