ஜேர்மனியில் முடங்கிய விமான சேவை : இலட்சக்கணக்கான பயணிகள் பாதிப்பு

ஜேர்மனியில் விமான நிலைய ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்த போராட்டத்தின் விளைவாக அங்கு விமான சேவைகள் முடங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக ஜேர்மனியின் Frankfurt, Berlin மற்றும் Munich உள்ளிட்ட 11 முக்கிய விமான நிலையங்களில் 1,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

200,000 பயணிகள் பாதிப்பு
இதனால் 200,000 விமானப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 80% வருகை மற்றும் புறப்படும் விமானங்கள் தடைபட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு கோரியே இந்த வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *