கர்நாடகாவில் 28 லோக்சபா தொகுதிகளிலும் ம.ஜ.த.,போட்டி : தேவகவுடா
புதுடில்லி: 2024 லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் 28 தொகுதிகளிலும் பா.ஜ., மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிடும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்தார்.கடந்த செப்டம்பர் மாதம் மதசார்பற்ற ஜனதா கட்சி மூத்த தலைவர் தேவகவுடா, குமாரசாமி ஆகியோர் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.,தேசிய தலைவர் நட்டா ஆகியோரை டில்லியில் சந்தித்து பேசினர்.
அப்போது 2024 தேர்தலில் பா.ஜ..,- ம.ஜ.,த, கூட்டணி உறுதியானது.இதையடுத்து நேற்று மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கர்நாடகாவில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து மொத்தமுளள 28 லோக்சபா தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் போட்டியிடும். இத்தேர்தலுக்கு பின் நல்லதொரு முடிவை நீங்கள் பார்க்க போகிறீர்கள் என்றார்.