பெத்லகேம் கிறிஸ்துமஸ்… போர் நிறுத்தம் வேண்டும் பாலஸ்தீன சிறுமிகள்!
காஸா இடையே போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பாலஸ்தீன சிறுமிகள் பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இயேசு பிறந்ததாக கருதப்படும் பெத்லகேம் அருகே நடைபெற்ற சிறுமிகளின் ஊர்வலம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (டிச. 25) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
படிக்க | முதல்முறை கிறிஸ்துமஸ் கொண்டாடிய உக்ரைன் மக்கள்!
இஸ்ரேல் – காஸாவுக்கு இடையே போர் நடைபெற்று வரும் பாலஸ்தீனத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. பாலஸ்தீன சாரணர் இயக்கத்தைச் சேர்ந்த சிறுமிகள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்றனர். இயேசு கிறிஸ்து பிறந்த பூமியில் ஒற்றுமை, அமைதி திரும்ப வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இயேசு கிறிஸ்து பிறந்ததாகக் கருதப்படும் பெத்லகேம் நகரம், பாலஸ்தீனத்தின் மேற்கு கரையிலுள்ள ஜெருசலேமுக்கு அருகில் அமைந்துள்ளது.
இஸ்ரேல் – காஸாவின் ஹமாஸ் படையினருக்கு இடையிலான போரின் காரணமாக இயேசு பிறந்த பாரம்பரிய இடத்தில் அதிகாரிகள் கொண்டாட்டங்களை கைவிட அறிவுறுத்தியிருந்தனர். எனினும், பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது.