ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம்… புதிய RV400 BRZ எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் அறிமுகம்!

பிரபல எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ரிவோல்ட் மோட்டார்ஸ் (Revolt Motors), தனது RV400 எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளின் புதிய வேரியன்ட்டான புதிய RV400 BRZ-ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இந்த எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.38 லட்சம் ஆகும். இந்த புதிய EV-க்கான புக்கிங்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் மற்றும் அதன் டீலர்ஷிப் நெட்வொர்க்கில் தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் RV400-ஐ ஒப்பிடும் போது RV400 BRZ மோட்டார் சைக்கிளை பற்றி கூறப்படும் செயல்திறன் மற்றும் பேட்டரி சார்ஜ் நேரம் ஏறக்குறைய ஒரே மாதிரியானவையாக இருக்கின்றன.

புதிய எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளான RV400 BRZ, 3.24kWh லித்தியம்-அயன் பேட்டரியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இது RV400 எலெக்ட்ரிக் பைக்கை போலவே Eco மோட்-ல் 150 கிமீ, நார்மல் மோட்-ல் 100 கிமீ மற்றும் ஸ்போர்ட் மோட்-ல் 80 கிமீ வரையிலான ரேஞ்சை வழங்குகிறது. அதே போல இந்த புதிய எலெக்ட்ரிக் பைக்கானது ஸ்போர்ட்ஸ் மோட்-ல் 80 கி.மீ டாப்-ஸ்பீட்டில் செல்லும் என நிறுவனம் கூறுகிறது. அதே நேரம் செயல்திறனைப் பொறுத்தவரை, RV400 BRZ பைக்கானது அதிகபட்சமாக 85kmph டாப் ஸ்பீடில் செல்லும்.

இந்த எலெக்ட்ரிக் பைக்கின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 4.5 மணிநேரம் ஆகும். அதே நேரம் 3 மணிநேரத்தில் இதன் பேட்டரியை 0 முதல் 75 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த மோட்டார் சைக்கிளில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு உள்ளது. இது மோட்டார் சைக்கிளின் வேகத்தை குறைக்கும் போது எனர்ஜியை பெறுவதன் மூலம் ரேஞ்சை அதிகரிக்க உதவுகிறது.

அம்சங்கள்…

RV400 BRZ எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளில் கொடுக்கப்பட்டிருக்கும் அம்சங்களை பார்த்தோம் என்றால், இதில் USD ஃப்ரன்ட் ஃபோர்க்ஸ், மோனோ-ஷாக் ரியர் சஸ்பென்ஷன், ஆல்-LED லைட்டிங்ஸ் மற்றும் ஸ்பீட், பேட்டரி லெவல்,ரைடிங் மோட் மற்றும் டெம்ப்ரேச்சர் உள்ளிட்ட தகவல்களைக் காட்டும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டயவற்றைக் கொண்டுள்ளது.

தவிர RV400 BRZ பைக்கை இயக்கும் ரைடர்கள் தங்களின் வாகனம் எப்படி ஒலிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்யலாம். இதற்காக நிறுவனம் 4 சவுண்ட் ஆப்ஷன்களை இதில் வழங்கி இருக்கிறது. இந்த சவுண்ட் ஆப்ஷன்களை நிறுவனத்தின் MyRevolt ஆப்-லிருந்து தேர்வு செய்யலாம். மேலும் சவுண்ட் எதுவும் வேண்டாம் என்றால் no sound ஆப்ஷனையும் தேர்வு செய்து கொள்ளலாம். combi-braking system மற்றும் சைட்-ஸ்டாண்டட் கட்-ஆஃப் அம்சமும் இதில் உள்ளது. இருப்பினும் RV400-ல் இருக்கும் ஃபோன் ஆப் கனெக்டிவிட்டி அம்சம் இதில் கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. புதிய RV400 BRZ பைக்கானது பசிபிக் ப்ளூ, காஸ்மிக் பிளாக், டார்க் சில்வர், ரெபெல் ரெட் மற்றும் லூனார் கிரீன் உள்ளிட்ட 5 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *