இது தெரியுமா ? காராமணியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்.
காராமணியில் உள்ள இரும்புச் சத்தானது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது.
காராமணியில் உள்ள ஆன்டிஆக்ஸிடேன்டுகள், விட்டமின் சி, புரதம் ஆகியவை சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகின்றன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடேன்டுகள் சருமம் முதிர்ச்சி அடைவதை தடை செய்து வயதான தோற்றம் ஏற்படாமல் சருமத்தை பாதுகாக்கிறது.
காராமணியில் உள்ள கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு போன்றவை எலும்புகளின் பாதுகாப்பில் உதவுகிறது. எனவே இதனை உண்டு எலும்புகளைப் பாதுகாக்கலாம்.காராமணியில் காணப்படும் மெக்னீசியமானது இன்சுலின் சுரப்பினை சீராக்கும். இதனால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். மேலும் இது உடல்சோர்வினை நீக்கி நல்ல தூக்கத்திற்கும் வழிவகை செய்கிறது.
காராமணியில் மெக்னீசியம் மற்றும் டிரிப்தோபன் என்னும் சத்து உள்ளது. இது உடலின் சோர்வினைப் போக்கி நல்ல தூக்கம் ஏற்பட வழிவகை செய்கிறது. தூக்க வராமல் தவிப்பவர்கள் தூங்கச் செல்வதற்கு முன்பு காராமணியை சாப்பிட்டுவிட்டு படுத்தால் நல்ல தூக்கத்தினைப் பெறலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவானது காராமணியில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இவற்றை காலை, மாலை, இரவு என ஆகிய மூன்று நேரங்களிலும் எடுத்துக்கொள்வதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
குளிர்ச்சியை தரக்கூடிய இந்த பயிறில், நார்ச்சத்து, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், புரதச்சத்து, போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.. உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு பெஸ்ட் பயிறு இந்த காராமணி.
மருத்துவ பயன்கள் :
- காராமணியை அடிக்கடி சாப்பிடுவதால், கல்லீரல் பிரச்சனைகள் நெருங்குவதில்லை.. இதனால் மஞ்சள் காமாலை நோய்கள் ஏற்படாமலும் தடுக்கப்படுகின்றன.
- தலைமுடி உதிர்தல் பிரச்சனை இருப்பவர்கள், காராமணியை அடிக்கடி சாப்பிடலாம்.. உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், காராமணியை சாப்பிடலாம்.. இதனால், பக்கவாதம், இதய நோய்கள் வராமல் தடுக்கப்படும்.
- உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.
- வயிற்றுப்புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் உண்டு.
- வளரும் குழந்தைகளுக்கு மிகவு உகந்தது.
- வயிற்றில் புற்றுநோய் வராமல் தடுக்கும் பண்புகளை கொண்டது இந்த பயிறு.. இதிலுள்ள வைட்டமின் சி- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.. முக்கியமாக நீர்த்தன்மை நிறைந்திருக்கிறது. நார்ச்சத்து அதிகம் என்பதால், ரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.