இன்று தை மாத வெள்ளிக்கிழமை… இன்று விரதமிருந்து அம்பிகையை வழிபடுங்கள்..!
வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால், நமக்கு செல்வத்தை அவள் அள்ளிக் கொடுத்து அருள் மழை பொழிவாள். எத்தனை வெள்ளிக்கிழமை வந்தாலும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கும் தை மாத வெள்ளிக்கிழமைகளுக்கும் தனிப்பெருமை உண்டு.
இந்த இரண்டு மாதங்களிலும் வரும் வெள்ளிக்கிழமைகளில் தெற்கு நோக்கிய அம்பிகையையும், வடக்கு நோக்கிய அம்பிகையையும் வழிபாடு செய்து வரலாம். நோய் பரவல் காலமாக இருப்பதால் கோவிலுக்கு போக முடியாத சூழ்நிலை உள்ளது எனவே வீட்டிலேயே பாயசம் செய்து அம்மன் படத்திற்கு முன்பு நைவேத்தியம் செய்து வழிபடலாம்.ஒருவரின் ஜாதகத்தில் அஷ்டலட்சுமி யோகம் இருந்தால் அவர் செல்வத்திற்கு அதிபதியாக திகழ்வார். லட்சுமி யோகத்தை ஜெனன ஜாதகத்தில் பெற்ற ஒருவர் அனைத்து செல்வங்களையும் பெற்று அரசனுக்கு நிகராக விளங்குவார். ஜாதகத்தில் குருவும் கேதுவும் இணைந்திருந்தால் அது கோடீஸ்வர யோகம் தரும் அமைப்பு என்கின்றனர் ஜோதிடர்கள். தை வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அம்மனை வணங்கினால் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும் கோடீஸ்வர யோகம் வீடு தேடி வரும்.