வரும் 10-ம் தேதிக்குள் அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த வேண்டும்..!
பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வெளியிட்ட உத்தரவில்,
கல்வியாண்டு முழுவதும் பள்ளிகளில் நிகழும் தொடர்ச்சியான கல்வி மற்றும் கல்விசார் செயல்பாடுகளில் மாணவர்களின் பங்கேற்றினை, ஆண்டு இறுதியில் பெற்றோர்கள் முன்னிலையில் வெளிப்படுத்த ஆண்டுவிழா நல்வாய்ப்பாக அமைகிறது. அனைத்து அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும், பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஆண்டுவிழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆண்டுவிழா நடத்துவதற்கு ஏதுவாக ரூ. 14.93 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக மாணவர்களின் எண்ணிக்கை 100-க்கு கீழ் உள்ள பள்ளிகளுக்கு ரூ.2,500, அதிகபட்சமாக 2,000 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு ரூ.50,000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.