முரண்டு பிடித்த தோனி.. சிஎஸ்கே உரிமையாளர் நிறுவனத்தில் பாய்ந்த அமலாக்கத்துறை ED ரெய்டு.. உண்மை என்ன?

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனியின் கிரிக்கெட் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனர் சீனிவாசன். இப்போதும் கூட அவரது அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவே தோனி இருக்கிறார். இந்த நிலையில், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி உள்ளது. தோனிக்கு செக் வைக்க வேண்டி இந்த ரெய்டு நடந்து இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சமீபத்தில் ராமர் கோவில் திறப்பு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் திறப்பு விழாவிற்கு பிரபலங்கள் பலருக்கு அழைப்பு சென்றது. அதில் தோனியும் ஒருவர். ராமர் கோவில் திறப்பு விழா மத்தியில் ஆளும் பாஜக அரசின் ஆகப் பெரிய சாதனையாக முன்னிறுத்தப்படுகிறது. அதை வைத்தே 2024 நாடாளுமன்ற தேர்தல் நகர்வுகள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஆளும் பாஜக அரசை பகைத்துக் கொள்ள யாரும் விரும்ப மாட்டார்கள் என்பதால் தோனி நிச்சயம் அந்த விழாவில் பங்கேற்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு செல்லவில்லை. அப்போதே தோனி மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று விமர்சகர்கள் கூறி வந்தனர். தோனி தொடர்புடைய சில சிவில் வழக்குகள் உள்ளதால் அதை வைத்து ஏதாவது சிக்கல் அவருக்கு வரலாம் என கருதப்பட்ட நிலையில் தற்போது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மீது ரெய்டு நடந்துள்ளது. அதுவும் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்பான ஒரு விஷயத்தில் தான் ரெய்டு நடந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று கூறப்படுகிறது.

முன்னதாக தோனி விவசாயிகள் போராட்டம் மற்றும் மாலத்தீவு பிரச்சனை போன்றவற்றில் மத்திய அரசுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பேசவில்லை. அதைத் தொடர்ந்து தற்போது அவர் ராமர் கோவிலுக்கு அழைப்பு விடுத்தும் வரவில்லை. எனவே தான் அவருக்கு நெருக்கமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் ரெய்டு நடந்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். அந்த நிறுவனம் அந்நிய செலாவணி சட்டத்துக்கு புறம்பாக 250 – 300 கோடி வரை பணப் பரிமாற்றம் செய்து இருப்பதாக வந்த புகாரில் அடிப்படையில் இந்த அமலாக்கத்துறை ரெய்டு நடந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *