மாநகராட்சி, நகராட்சியில் 1,933 காலிப்பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.?
தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அவ்வப்போது வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அந்தந்த துறை சார்பில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட இடங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நகராட்சி துறையில் காலியாக 1933 பணியிடங்களுக்கு பிப்ரவரி 9 முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவியாளர், உதவிப்பொறியாளர், இளநிலை பொறியாளர், வரைவாளர், துப்புரவு ஆய்வாளர் தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வுகள் ஜூன் 30-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை இந்த பணியிடங்களுக்கு கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் www.tnmaws.ucanapply.com என்ற இணையதள முகவரியில் அறிவிக்கலாம் என்றும் தெரிவிக்க்பட்டுள்ளது.