தினமும் 4 ஸ்பூன் மாதுளை சாப்பிட்டால் இதெல்லாம் நடக்குமா? உண்மையை தெரிஞ்சிக்கோங்க

அதிகமான சத்துக்களைக் கொண்ட மாதுளம் பழத்தினை தினமும் 4 ஸ்பூன் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை குறித்து தெரிந்து கொள்வோம்.

மாதுளை
மாதுளை பழத்தில் வைட்டமின், தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட் போன்றவை உள்ள நிலையில் இவை நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு வீக்கத்தை குறைத்து இதய நலனை பாதுகாக்கிறது.

தினமும் 4 ஸ்பூன் மாதுளை சாப்பிட்டால் முடி வளர்ச்சி அதிகரிப்பதுடன், உடல் எடையையும் குறையும் என்றும் நியாபக சக்தி அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.

ஆனால் இவை சாத்தியமா என்று கேட்டால் யோசிக்க வேண்டிய நிலை தான் ஏற்படும். தலைமுடி அதிகமாக வளரும், உடல் எடையை குறைக்கும் என்று கூறப்பட்டாலும், இந்த பலனை பெற வேண்டும் என்றால் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, சரிவிகித உணவுப்பழக்கம், உடற்பயிற்சி இவற்றினை நிச்சயம் கடைபிடிக்க வேண்டுமாம்.

உண்மை என்ன?
உடல் எடையை மாதுளை குறைக்கும் என்றால் அதனை நம்பவே கூடாது. ஆரோக்கியமான வாழ்க்கைமுறையுடன் சரியான உணவு பழக்கத்தை கடைபிடித்து, உடற்பயிற்சி செய்தால் தான் உடல் எடையை குறைக்க முடியும் என்று உணவுத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதே போன்று தலைமுடி வளர்ச்சியில் மரபணு, ஹார்மோன் சமநிலை, ஊட்டச்சத்து, ஆரோக்கியமான உடல்நலம் போன்றவை தலைமுடி வளர்ச்சிக்கு அவசியமாகின்றது. மாதுளை பழத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆண்டி ஆக்சிடெண்ட் இருந்தாலும் இவற்றினை சாப்பிட்டால் முடிவளர்ச்சி அதிகரிக்கும் என்பதில் எந்தவொரு ஆதாரமும் இல்லை.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *