லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு
லிட்ரோ எரிவாயு விலையில் இம்மாதம் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (02.02.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
விலை திருத்தம்
அத்துடன் மக்களைப் பாதித்துள்ள பல்வேறு இன்னல்கள் காரணமாகவே பெப்ரவரி மாதம் லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளாமல் தற்போதைய விலையையே பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் விலை அதிகரிப்பு செய்ய வேண்டிய போதிலும் நிறுவனம் நட்டத்தை தாங்கிக்கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.