சீனாவின் கடன் வலையில் சிக்கிய நாடுகள்! முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா…
உலகில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடான சீனா, பட்டுப்பாதை திட்டத்தின் மூலம் அதிக கடன் வலைகளை விரித்து பல நாடுகளை அடிமைப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.
உலகில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் வறுமைப்பட்ட மற்றும் வருமானம் குறைந்த நாடுகளை இலக்காக வைத்து இந்த திட்டத்தை சீனா முன்னெடுத்துவருகின்றது.
அந்தவகையில், குறித்த நாடுகள் கடன்களை மீள அடைக்கமுடியாததை
, அந்தநாடுகளை அடிமைப்படுத்தும் நோக்கில் கடன்களை வழங்கி தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், இந்த பட்டுப்பாதை திட்டத்தில் பங்குபெறும் நாடுகளுக்கு துறைமுகம், ரயில் மற்றும் நில உள்கட்டமைப்புகளை நிர்மாணிக்க நிதியளிக்கின்ற வகையில் சீனா அதிக கடன்களை வழங்கியுள்ளது.
இதற்கமைய, சீனாவிற்குக் கடனில் உள்ள நாடுகள் பெரும்பாலும் ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளநிலையில், மத்திய ஆசியா, தென்கிழக்கு ஆசியாப் பகுதிகளிலும் சீனாவின் கடன் பரப்புக்கள் பரந்துள்ளன.
சீனாவிடம் இருந்து பெரிய கடன் சுமைகளைக் கொண்ட நாடுகளாக கானா, ஜிபூட்டி மற்றும் அங்கோலா விளங்குகின்றன.
அதேவேளை, ஆபிரிக்க நாடான ஜிபூட்டியில் வல்லரசு நாடுகளை அச்சுறுத்தும் வகையில் சீனா கடற்படைத்தளத்தினை அமைத்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.