பிரபல நடிகை பூனம் பாண்டே புற்றுநோயால் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!
பூனம் பாண்டேவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் இறந்துவிட்டதாக, அவரது குழுவினர் தெரிவித்தது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர்கள் போட்ட பதிவில், “ எங்கள் அன்புக்குரிய பூனம் பாண்டேவை கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இழந்துவிட்டோம் என்பதைத்ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று பதிவிட்டிருந்தனர். வியாழக்கிழமை இரவு அவர் உயிரிழந்ததாக பூனம் பாண்டேவின் குழு நபர்கள் தெரிவித்துள்ளனர்.
பூனம் பாண்டே பிரபல மாடல், 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன் வெளியிட்ட வீடியோ மூலம் மிகவும் பிரபலமானார். 2011 உலகக்கோப்பையை இந்தியா வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று அவர் அந்த வீடியோவியில் கூறியிருந்தது பெருமளவு சர்ச்சையையும் கிளப்பியது. மேலும், பூனம் கடைசியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கிய லாக் அப்பின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெறவில்லை என்றாலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் பெருகியது. சமூக வலைத்தளங்களிலும் இவர் மிகவும் பிரபலம். சாம் பாம்பே என்பவரை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட கொண்டார். அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை கணவருடன் பகிர்ந்து வந்த அவர் சில நாட்களிலேயே சாம் பாம்பே மீது குடும்ப வன்முறை வழக்கு தொடர்ந்து அவர் பிரிந்தது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளானது.
பூனம் பாண்டே இறந்துவிட்டாரா.. என்னால் உண்மையில் நம்ப முடியவில்லை??” என்றும், “ஓம் சாந்தி,” என்றும் ரசிகர்கள் பலரும் பூனம் பாண்டேவின் மறைவிற்கு மிகுந்த வருத்தத்துடன் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர் இந்த செய்தியை நம்ப முடியவில்லை என்றும் அதிர்ச்சியில் உள்ளதாகவும் கமெண்ட் செய்து வருகின்ன்றனர்.