இட்லி, தோசைக்கு தொட்டுக்க காரசாரமான ‘ஆந்திரா கார சட்னி’… இப்படி செய்தால் 2 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.!

பொதுவாக இட்லி, தோசைக்கு மற்ற எல்லா சட்னியை விடவும் காரசாரமான மிளகாய் சட்னியை தொட்டு சாப்பிடத்தான் அனைவருக்கும் பிடிக்கும். கார சட்னியில் பலவகையுண்டு. தேங்காய் சேர்த்து அரைப்பது, ரெட் கார சட்னி, மிளகாயை தனியாக அரைத்து வைக்கும் சட்னி, ஆந்திரா ஸ்டைல் கார சட்னி என சொல்லிக்கொண்டே போகலாம்.

அதிலும் ஆந்திராவில் வைக்கும் காரம் தூக்கலான கார சட்னிக்கு என்றே பல உணவு பிரியர்கள் உள்ளனர். எனவே இந்த காரமான ஆந்திரா கார சட்னி 2 மாதம் வரை கொடாமல் இருக்கும்படி வீட்டிலே எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள் :

காய்ந்த மிளகாய் – 50 கிராம்

புளி – நெல்லிக்காய் அளவு

பூண்டு – 30 பல்

சின்ன வெங்காயம் – 100 கிராம்

கறிவேப்பிலை – 3 கொத்து

நல்லெண்ணெய் – 150 கிராம்

கடுகு

உளுத்தம் பருப்பு

கல் உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :

முதலில் காய்ந்த சிகப்பு மிளகாயை ஒரு மணிநேரம் தண்ணீரில் போட்டு ஊறவைத்து கொள்ளவும்.

அதேபோல் எடுத்து வைத்துள்ள புளியையும் தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும்.

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் ஊறவைத்த காய்ந்த மிளகாயை தண்ணீரோடு சேர்த்து கொள்ளவும்.

பிறகு அதனுடன் ஊறவைத்துள்ள புளி மற்றும் கல் உப்பை சேர்த்து நன்றாக மசிய அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து அதில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்துக்கொள்ளுங்கள்.

பிறகு அதில் கறிவேப்பிலை, நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள பூண்டு சேர்த்து எண்ணெயில் வதக்கிக் கொள்ளுங்கள்.

பூண்டு பொன்னிறமாக வதங்கியவுடன் நீளவாக்கில் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள்.

அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுதை அதில் சேர்த்து நன்றாக கிளறிக்கொள்ளவும்.

மிதமான தீயில் சிறிது நேரம் வதங்கியவுடன் அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

பிறகு கடாயை முடி ஒரு 10 நிமிடங்களுக்கு சமைக்கவும். அடிக்கடி அதை கிளறி விட மறக்காதீர்கள். அப்போது தான் சட்னி அடிபிடிக்காது.

சட்னியில் எண்ணெய் திரண்டு மேல வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

பிறகு சட்னி ஆறியவுடன் ஒரு இறுக்கமான பாட்டிலில் போட்டு வைத்தால் 2 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும் இந்த ‘ஆந்திரா கார சட்னி’

இந்த ஆந்திரா கார சட்னியை நீங்கள் இட்லி, தோசை, அப்பம் ஏன் சப்பாத்தியுடன் கூட தொட்டு சாப்பிடலாம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *