விமானத்தில் மைனர் சிறுமிக்கு முன்பாக சுயஇன்பம்.. இந்திய வம்சாவளி மருத்துவரை விடுவித்த நீதிமன்றம்.!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் விமானத்தில் மைனர் சிறுமிக்கு அருகில் சுயஇன்பம் செய்ததாக குற்றச்சாட்டில் இருந்து விடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி மருத்துவர் சுதிப்தா மொஹந்தி (33). இவர் பாஸ்டனில் உள்ள பெத் இஸ்ரேல் டீக்கனஸ் மருத்துவ மையத்தின் முதன்மை பராமரிப்பு மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் பாஸ்டன் செல்லும் ஹவாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்தார்.
அப்போது 14 வயது சிறுமி அவரது தாத்தா பாட்டியுடன் அந்த விமானத்தில் பயணித்துள்ளார். அந்த நேரத்தில் 14 வயது சிறுமி முன்பு விமானத்தில் கழுத்து வரை போர்வையால் தன்னை மூடிக்கொண்டு சுயஇன்பத்தில் ஈடுபட்டுள்ளார். இதை கண்டு முகம் சுளித்த அந்த சிறுமி இதுதொடர்பாக தாத்தா பாட்டியிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் குடும்பத்தினர் புகார் அளித்ததை அடுத்து போலீசார் அவரைக் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு பாஸ்டன் ஃபெடரல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை சுதிப்தா மொஹந்தி மறுத்துள்ளார். மேலும், நான் ஒரு மருத்துவராக மற்றவர்களைக் கவனிப்பதற்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன். இந்த தவறான குற்றச்சாட்டுகள் எனக்கு கடும் மனவேதனை அளிப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து இந்திய வம்சாவளி மருத்துவர் குற்றமற்றவர். அவர் விமானத்தில் எந்தவிதமான தவறான செயலிலும் ஈடுபடவில்லை என்பதை தெளிவாகிறது என நீதிமன்றம் அவரை விடுவித்தது.