ரயில் டிக்கெட் ரத்து செய்தவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1.8 லட்சம் அபேஸ்..!
சென்னை வடபழனியை சேர்ந்தவர் ஸ்ரீதரன்(51). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் நாகர்கோவில் செல்ல ரயிலில் முன்பதிவு செய்து இருந்தார். பிறகு வேறு பணி காரணமாக பணத்தை ரத்து செய்துள்ளார். இதனால், ஐஆர்சிடிசி இணையதளத்தில் தனது பணத்தை ரத்து செய்துள்ளார். பிறகு இணையத்தில் உள்ள உதவி எண்ணில் தொடர்பு கொண்டு ஸ்ரீதரன் தனது பணம் ரத்து செய்தது குறித்தும், தனது பணத்தை மீண்டும் அனுப்பும்படி கூறியுள்ளார். எதிர் முனையில் பேசிய நபர், பணம் அனுப்ப ஸ்ரீதரனிடம் அவரது வங்கி கணக்கு விபரங்களை கேட்டுள்ளார். அதன்படி ஸ்ரீதரன் தனது வங்கி கணக்கு விபரங்களை அனுப்பியுள்ளார்.
சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1.8 லட்சம் பணம் எடுக்கப்பட்டதாக செல்போனில் குறுஞ்செய்தி வந்தது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஸ்ரீதரன், உடனே சம்பவம் குறித்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தென்னக ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளத்தில் பதிவு செய்த உதவி எண் ஸ்ரீதரனிடம் பேசிய நபரின் உதவி எண் கிடையாது என்றும், இது போலியான இணையதளம் மூலம் மோசடி நபர்கள் பணத்தை பறித்துள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவந்ததுள்ளது. இதையடுத்து போலீசார் மோசடி நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுபோன்ற போலி இணையதளங்கள் நடத்துபவர்களை கண்டறிந்து, உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.