அடுத்த வாரம் ஓடிடியில் வெளியாகிறதா கேப்டன் மில்லர் ..?
அருண் மாதேஷ்வரன் இயக்கி தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கேப்டன் மில்லர்.கிராமத்தில் உள்ள ஜாதி கொடுமைகளை வெறுத்து ஆங்கிலேய ராணுவத்தில் சேருகிறார் தனுஷ்.பிரிட்டிஷ் ராணுவம் தனது மக்களையே தன்னை வைத்து கொல்ல வைப்பதை பார்த்து வெறுப்படையும் தனுஷ் போராளியாக மாறி ஆங்கிலேய அரசை எதிர்க்கிறார்.இதனால் ஜமீன்தாரும், பிரிட்டிஷ் அரசும் தனுஸை ஒழிக்க நினைக்கிறது. இறுதியில் வெல்வது யார் என்பதுதான் கதை.
இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் கேப்டன் மில்லர் படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் 50 கோடிக்கு மேல் தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ OTT தளத்தில் வருகின்ற பிப்ரவரி 9 தேதி ரிலீஸ் ஆகிறது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் கேப்டன் மில்லர் கிடைக்கிறது.