ஜேர்மனியில் நாடு முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்…
ஜேர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் இன்று 24 மணி நேர வேலைநிறுத்தத்தைத் துவங்கியுள்ளதால், நாடு முழுவதும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள தொழிலாளர் யூனியன்
ஜேர்மனியின் போக்குவரத்துத் தொழிலாளர் யூனியனான Verdi, வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால், பவேரியா தவிர்த்து, மற்ற அனைத்து ஜேர்மன் மாகாணங்களிலும் பேருந்துகள் மற்றும் ட்ராம்கள் ரத்து செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.
விமானப் பணியாளர்களுக்கும் அழைப்பு
மேலும், ஹாம்பர்க் நகர விமான நிலைய ground staff என்னும் விமானத்துக்கு வெளியில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க Verdi அழைப்பு விடுத்துள்ளது.
ஆகவே, விமானங்களில் பயணிக்க இருக்கும் பயணிகள், இந்த வேலைநிறுத்தம் காரணமாக, முன்கூட்டியே தங்கள் பயணத்தை திட்டமிட்டு அதன்படி செயல்படுமாறு ஹாம்பர்க் விமான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
Verdi யூனியன் சுமார் 90,000 போக்குவரத்துப் பணியாளர்களை பிரதிநிதிப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.