செல்போன், சமூக ஊடகப் பயன்பாட்டால் அதிகரிக்கும் சந்தேகம்..
கடந்த ஐந்து ஆண்டு காலத்தில், தம்பதிகளுக்கு இடையே சந்தேகம், திருமணத்தை மீறிய உறவு போன்றவை 2.5 மடங்கு அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
குஜராத்தில் இதுபோன்ற குடும்ப பிரச்னைகளால் மன உளைச்சலுக்கு ஆளாவோருக்கான இலவச சேவையான அபயம் உதவி எண்ணுக்கு தற்போது அதிகப்படியான அழைப்புகள் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் இந்த ஒரு மாதத்தில்இதுபோன்று 750 அழைப்புகள் வந்திருப்பதாகவும், சில குடும்ப வன்முறை மற்றும் துன்புறுத்தல் தொடர்பானதாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதில், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு அழைப்புகளாவது, சமூக ஊடகப் பயன்பாட்டினால், கணவர் அல்லது மனைவி மீது வாழ்க்கைத்துணைக்கு ஏற்படும் அதிருப்தி அல்லது சந்தேகம் தொடர்பானதாக இருப்பதாகவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று வரும் அழைப்புகளுக்கு, மன நல ஆலோசனை வழங்கப்படுவதாகவும், இருவரும் நேரில் வரவழைக்கப்பட்டு, பிரச்னைகள் பேசி தீர்வுக் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மனைவிக்கு நண்பர்களிடமிருந்து அழைப்பு வருவதைப் பிடிக்காமல் கணவர் சண்டை போடுவது, கணவரின் செல்போனை மனைவி எடுத்து அதில் அழைப்பு வந்தது, வாட்ஸ்ஆப் சாட்கள் தொடர்பாக சண்டை போடுவது நாளுக்கு நாள் அதிகரித்திருப்பதாகவும் அபயம் அமைப்பில் பணியாற்றுவோர் தெரிவிக்கிறார்கள்.
எனவே, தம்பதியர் சிறு சண்டை ஏற்பட்டாலும், உடனடியாக இருவரும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் மனநல ஆலோசகர்கள்.
பல குடும்பங்களில் பிரச்னைக்கு செல்போன் தான் முக்கிய காரணமாக இருப்பதாகவும், மன உளைச்சல் ஏற்பட்டால் உடனடியாக அவசர உதவி எண்களை அல்லது ஆலோசனை மையங்களை நாடுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.