அணு ஆயுத சோதனை மேற்கொள்ளும் பிரித்தானியா: ஒரு சீரியஸ் தகவலும் ஒரு வேடிக்கையான தகவலும்…
உலகம் மூன்றாம் உலகப்போரை நெருங்கிக்கொண்டிருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிவரும் நிலையில், பிரித்தானியா, இன்னும் சில நாட்களில் அணு ஆயுத சோதனை ஒன்றை மேற்கொள்ளத் தயாராகி வருகிறது.
இன்னும் சில நாட்களில்…
பிரித்தானியா, இன்னும் சில நாட்களில் அணு ஆயுத சோதனை ஒன்றை மேற்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், சோதனைக்காக, HMS Vanguard என்னும் நீர்மூழ்கிக் கப்பல் தயாராகிவருவதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் கிழக்குக் கரையிலிருந்து Trident 2 என்னும் ஏவுகணையை அந்த நீர்மூழ்கி ஏவ இருக்கிறது. ஆனால், அதில், அணு ஆயுதங்கள் எதுவும் இருக்காது. 6,000 மைல்கள் பயணிக்கும் அந்த ஏவுகணை, பிரேசிலுக்கும் மேற்கு ஆப்பிரிக்காவுக்கும் நடுவே கடலில் விழும்.
இந்த சோதனை மேற்கொள்ளப்பட இருப்பதைத் தொடர்ந்து, அமெரிக்க பாதுகாப்பு தொடர்பிலான அமைப்புகளில் ஒன்றான The US National Geospatial Intelligence Agency என்னும் அமைப்பு, அப்பகுதியில் பயணிக்கும் கப்பல்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒரு வேடிக்கையான தகவல்
இது சீரியஸான தவல். கூடவே, ஒரு வேடிக்கையான தகவலும் வெளியாகியுள்ளது.
அதாவது, 2016ஆம் ஆண்டு, இதேபோல ஒரு அணு ஆயுத சோதனையை பிரித்தானியா நடத்த, அது தோல்வியில் முடிந்ததாம்.
ஆகவே, இம்முறை எந்த தவறும் நடந்துவிடக்கூடாது என்று கூறும் பக்கிங்காம் பல்கலை பேராசிரியரான Anthony Glees என்பவர், அது குறித்து வேடிக்கையாக ஒரு விடயத்தைக் கூறியுள்ளார்.
பிரித்தானியாவின் அணு ஆயுத சோதனை வெற்றிபெற்றால், ரஷ்ய ஜனாதிபதி புடின் அது குறித்து பெரிதாக எதுவும் அலட்டிக்கொள்ளமாட்டார் என்று கூறும் பேராசிரியர் Anthony Glees, அதே நேரத்தில், அந்த சோதனை 2016ஆம் ஆண்டு நடந்ததைபோல தோல்வியில் முடிந்ததானால் அவ்வளவுதான், புடின் சத்தமாக சிரிக்கப்போகிறார். அதனால், கிரெம்ளின் மாளிகையே அதிரப்போகிறது என்று கூறியுள்ளார்.
ஆகவே, இந்த முறையாவது சொதப்பாமல் ஒழுங்காக அணு ஆயுத சோதனையை மேற்கொள்ளவேண்டும் என்கிறார் பேராசிரியர் Anthony Glees.