வாகை சூடு விஜய்..! தமிழக வெற்றி கழகத்திற்கு விஜய்யின் தாய் ஷோபா வாழ்த்து
நடிகர் விஜய் புதிதாக அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் நிலையில், தாய் ஷோபா விஜய்யின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விஜய் அரசியல் கட்சி தொடக்கம்
தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி பல ஆண்டுகளாக இருந்தது. இந்நிலையில் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி இருப்பதாக நடிகர் விஜய் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நடிகர் விஜய்க்கு பல தரப்பு மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தாய் ஷோபா வாழ்த்து
இந்நிலையில் தனது மகனும் நடிகருமான விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு தாய் ஷோபா தனியார் தொலைக்காட்சி ஒன்றின் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், எனக்கு அரசியல் குறித்து தெரியாது என்று தவறான கருத்தை தர மாட்டேன், ஒவ்வொரு குடிமகனுக்கும் குடிமகளுக்கும் இங்கு அரசியல் பொறுப்பு என்பது உள்ளது.
மக்களின் அபிமானத்தை பெற்ற விஜய் போன்ற ஆளுமைகள் நிச்சயமாக அரசியலில் நுழைய வேண்டிய பொறுப்பு உள்ளது.
புயலுக்கு பின் அமைதி, ஆனால் விஜய்யின் அமைதிக்கு பின் நிச்சயம் அரசியல் புரட்சி உள்ளது என தெரிகிறது. என்னவாக இருந்தாலும் மகனுக்கு ஓட்டு போடக் கூடிய தனி சந்தோஷம் தன்னிடம் இருப்பதாகவும் நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம் பேருக்கு ஏற்றது போலவே தமிழகத்தில் வெற்றி பெரும், விஜய்யை பொறுத்தவரை அவருக்கு மதம் சாதி ஆகியவற்றில் விருப்பம் கிடையாது, அவருக்கு பின் நிற்கும் அனைவரும் முன்னுக்கு வர வேண்டும் என்பதே விஜய்யின் விருப்பம்.
அத்துடன் வாகை சூடு விஜய் என்றும் அவரது தாயார் ஷோபா வாழ்த்து தெரிவித்துள்ளார்.